கோவை: கோவை மாநகரில் உள்ள பேருந்து, ரயில் நிலையங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு, அதில் வரும் பயணிகளில் அறிகுறி உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினமும் 500க்கும் மேலானவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகிறார்கள். அதில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் மாநகராட்சி பகுதிகளை சார்ந்தவர்களாக உள்ளனர்.
இந்நிலையில், கோவையில் கொரோனா பரவல் அதிகரித்து காணப்படுவதற்கு வெளியூரில் இருந்து வருபவர்களும் முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
இதனையடுத்து, கொரோனா பரவலை கட்டுப்படுத்த பேருந்து, ரயில் நிலையங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு காய்ச்சல் பரிசோதனைகள் மற்றும் கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கோவை காந்திபுரம், திருவள்ளூர் பேருந்து நிலையம், சிங்காநல்லூர் உள்ளிட்ட நகரின் முக்கிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் மருத்துவ பரிசோதனை முகாம்கள் அமைக்கப்பட உள்ளது.
இதுதவிர பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதிகளிலும் மருத்துவ பரிசோதனை முகாம்கள் அமைக்கப்பட உள்ளது. இப்பணிகளில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். வெளியூரில் இருந்து வரும் பயணிகளில் கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்,’’ என்று தெரிவித்தார்.