பாபர் மசூதி இடிப்பு வழக்கில் வெளியான தீர்ப்பை கண்டித்து கோவையில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

கோவை: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் வெளியான தீர்ப்பை கண்டித்து கோவையில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் வெளியான தீர்ப்பை கண்டித்து கோவையில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜகவின் மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்ட 17 பேரை லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது.



இந்நிலையில், இந்த தீர்ப்பை கண்டித்து கோவை ஆத்துப்பாலம் பகுதியில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் பெண்கள், குழந்தைகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



அப்போது, உச்சநீதிமன்றத்தில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட அத்வானி உள்ளிட்டோரை கைது செய்ய வலியுறுத்தியும், நீதி கிடைக்கும் என்று நம்பியிருந்த இஸ்லாமியர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக கூறி கோஷங்களை எழுப்பினர்.

இதனிடையே எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொருளாளர் அபுதாகிர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாபர் மசூதி இருந்த இடம் யாருக்குச் சொந்தம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இஸ்லாமியர்களின் முதுகில் குத்தும் வகையில் அமைந்திருந்தது. நாடு முழுவதும் விவசாய பாதுகாப்பு சட்டத்திற்கு எதிராக கொந்தளித்துக் கொண்டிருக்கும் சூழலில், இந்தத் தீர்ப்பு விவசாய சட்டம் விவகாரத்தை நீர்த்துப்போகச் செய்திருக்கிறது என்றார்.

மேலும், பாபர் மசூதி இடம் யாருக்குச் சொந்தம் என்ற விவகாரத்தில் உச்சநீதிமன்றம் நெஞ்சில் குத்தியது போல இந்த வழக்கில் லக்னோ சிறப்பு சிபிஐ நீதிமன்றம் இஸ்லாமியர்களின் நெஞ்சில் குத்தி இருக்கிறது. ஒரு சித்தாந்தத்தின் அடிப்படையில் நீதிமன்றங்கள் இயங்குகிறது எனவும் இந்தியா மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டத்திற்கு தயாராகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என தெரிவித்தார். இந்த வழக்கில் குறைந்தபட்சம் உச்சநீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி நாடு முழுவதும் எஸ்டிபிஐ கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது எனவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...