கோவை ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கொப்பரை வரத்து அதிகரிப்பு - விலை குவிண்டாலுக்கு ரூ.335 அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி!

கோவை: கோவை ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நேற்று நடந்த ஏலத்தில், கடந்த வாரத்தை விட கொப்பரை வரத்து அதிகரித்து காணப்பட்டது.


கோவை: கோவை ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நேற்று நடந்த ஏலத்தில், கடந்த வாரத்தை விட கொப்பரை வரத்து அதிகரித்து காணப்பட்டது. விலை குவிண்டாலுக்கு 335 ரூபாய் அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இது குறித்து விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மணிவாசகம் கூறும்போது, ஆனைமலை சுற்று வட்டாரப் பகுதியை சேர்ந்த விவசாயிகள், 452 மூட்டை கொப்பரைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். வியாபாரிகள் முன்னிலையில் அவற்றை தரம் பிரித்து அதிகாரிகள் ஏலமிட்டனர்.

முதல் தர கொப்பரை 238 மூட்டைகள் குவிண்டாலுக்கு குறைந்தபட்சம் ரூ.10,550 -க்கும், அதிகபட்சம் ரூ. 11,635 -க்கும் விற்பனையானது. 2-ம் தர கொப்பரை 214 மூட்டைகள், குவிண்டாலுக்கு அதிகபட்சம் ரூ. 9,555 -க்கும், குறைந்தபட்சம் ரூ. 7,550 -க்கும் விற்பனையானது. 14 வியாபாரிகள், 95 விவசாயிகள் ஏலத்தில் பங்கேற்றனர்.

மேலும், கடந்த வாரத்தை விட 138 மூட்டைகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. மொத்தம் 216 குவிண்டால் ரூ. 19 லட்சத்துக்கு ஏலமிடப்பட்டது. கடந்த வாரத்தை விட இந்த வாரம் குவிண்டாலுக்கு ரூ. 335 விலை அதிகரித்து உள்ளது’ என்று தெரிவித்தார்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...