கோவை: கோவையில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலா்களுக்கு மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டார்.
கோவை: கோவை மாநகராட்சியில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் ரூ.24.36 கோடி மதிப்பீட்டில் மேற்கு மண்டலம் ஆர்.எஸ்.புரம் திவான் பகதூர் சாலையில் சுக்ரவார்பேட்டை ரோடு சந்திப்பு முதல் கெளலிபிரவுன் ரோடு வரை மாதிரி சாலை அமைக்கும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை மாவட்டத்தில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளான சாலை அமைக்கும் பணிகள், பாதாள சாக்கடை குழாய் அமைக்கும் பணிகள், மின்சார புதைவடம், கேபிள்கள், 24X7 குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள், தொலைதொடர்பு கேபிள் அமைத்தல், மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள், இருபுறமும் பாதசாரிகள் நடைபாதைகள், அலங்கார தெருவிளக்குகள் அமைக்கும் பணிகள், ஒளிரும் விளம்பர பலகைகள் அமைக்கும் பணிகள் ஆகிய பணிகளை மாநகராட்சி ஆணையர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், சாலை ஓரங்களில் இருபுறங்களிலும் கடைகளின் முன்பு சாக்கடை கழிவுநீர் செல்லும் கால்வாய்களில் நீர் தேங்காமலும் மற்றும் கொசு உற்பத்தியை தடுக்கும் வகையில் கொசு மருந்துகளை தெளிக்கப்பட வேண்டும் என சுகாதார அலுவலர்களிடம் தெரிவித்தத ஆணையாளர் அவர்கள், இப்பணிகளை பொது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாவண்ணம் பணிகளை துரிதமாக மேற்கொள்ளுமாறும், சீர்மிகு நகர பணிகளை விரைந்து முடிக்குமாறு தொடர்புடைய அலுவலா்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது மாநகரப்பொறியாளா் ஆ.லட்சுமணன், தமிழ்நாடு மின்சார வாரிய செயற்பொறியாளர் வைதீஸ்வரன், நகரமைப்பு அலுவலா் ரவிச்சந்திரன், உதவி செயற்பொறியாளர் சுகந்தி, உதவி பொறியாளர்கள் கமலக்கண்ணன், சத்தியமூர்த்தி, குடிநீர் பிரிவு இளம்பொறியாளார்கள், மண்டல சுகாதார அலுவலர் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் உடனிருந்தனர்.