கோவை: ஆடு வளர்ப்பு மற்றும் கொப்பரை தேங்காய் பருப்பு உடைப்பு திட்டத்தில் ரூ.1.38 கோடி மோசடி செய்த இளைஞருக்கு 10 ஆண்டு சிறை மற்றும் ரூ.45 லட்சம் அபராதம் விதித்து கோவை டான்பிட் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையத்தில் அசோக் பார்ம்ஸ் மற்றும் கோப்ராஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் மூலம் அதிக வட்டி தருவதாக கூறி 2 திட்டங்கள் அறிவித்து விளம்பரப்படுத்தியது. ரூ.1 லட்சம் கொடுத்தால் ஆடு குட்டி வழங்கி, 3 வருடத்தில் திரும்ப பெற்று கொள்வதற்கு மாதம் பராமரிப்பு, போனஸ் மற்றும் ரூ.50 ஆயிரம் கொடுத்தால் கொப்பரை தேங்காய் வழங்கி அதிலிருந்து பருப்பு உடைத்து தருவதற்கு மாதம் வட்டி என அதிக வட்டி தருவதாக கூறி கவர்ச்சிகரமான விளம்பரம் செய்யப்பட்டது.
இதையடுத்து, ஈரோடு மாவட்ட சுற்று வட்டார பொதுமக்கள் இந்த திட்டங்களில் முதலீடு செய்துள்ளனர். தொடக்கத்தில் சரியாக வட்டியை வழங்கி வந்த நிறுவனம், பின்பு அதை நிறுத்தியதை அடுத்து, முதலீட்டாளர்கள் விளக்கம் கேட்டபோது முறையான பதில் இல்லாததால் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.
பின்னர், பாதிக்கப்பட்ட முதலீட்டாளர் கோபிச்செட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்த சிதம்பரம் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், மோசடி, டான்பிட் சட்டம் உட்பட 4 பிரிவுகளின் கீழ் ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர், கடந்த 2012ம் ஆண்டு மோசடியில் ஈடுபட்ட நிறுவன உரிமையாளர் ராஜேஷ் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இதுதொடர்பாக கோவை தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதில், 89 முதலீட்டாளர்களிடம் ரூ.1 கோடியே 38 லட்சத்து 25 ஆயிரத்து 550 மோசடி ஈடுபட்ட நிறுவன உரிமையாளர் ராஜேஷ்க்கு(30) 10 ஆண்டு சிறை மற்றும் ரூ.45 லட்சம் அபராதம் விதித்து கோவை தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.