கோவை: ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனக் கோட்டத்தில் புலிகள் கணக்கெடுப்பு பணிகள் தொடங்கியுள்ளது.
கோவை: ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனக் கோட்டத்தில் புலிகள் கணக்கெடுப்பு பணிகள் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக நாளை அட்டகட்டியில் உள்ள பயிற்சி மையத்தில் ஊழியர்களுக்கு பயிற்சி நடைபெறும் என வனத்துறை அறிவித்துள்ளது.
ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் புலிகள் கணக்கெடுப்பு தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று பொள்ளாச்சி மீன்கரை ரோட்டில் உள்ள வனத்துறை அலுவலகத்தில், ஆனைமலை புலிகள் காப்பக பொள்ளாச்சி கோட்ட துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் தலைமையில் நடைபெற்றது.

இதுதொடர்பாக வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், பொள்ளாச்சி கோட்டம், ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பொள்ளாச்சி, வால்பாறை, மானாம்பள்ளி, உலாந்தி ஆகிய நான்கு வனச்சரகங்களில் நான்காம் கட்ட புலிகள் கணக்கெடுப்பு பணி 01.10.2020-ம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது.
இதன்படி, இக்கோட்டத்தில் இரண்டு ச.கி.மீட்டருக்கு ஒரு நேர்கோட்டு பாதை வீதம் அமைக்கப்படும். ஒரு நேர்கோட்டு பாதைக்கு இரண்டு கேமராக்கள் பொருத்தப்படும். அதன்படி, பொள்ளாச்சிக் கோட்டத்தில் 245 நேர்கோட்டு பாதைகள் அமைக்கப்பட்டு, கேமராக்கள் பொருத்தப்பட்டு புலிகள் கணக்கெடுப்பு பணி நடைபெறும். இப்புலிகள் கணக்கெடுப்பில் அறிவியல் பூர்வமாக புகைப்படக் கருவிகள் மூலம் கணக்கெடுக்கும் பணி நடைபெறுவதால், புலிகள் வனவிலங்குகள் நடமாட்டம் குறித்து துல்லியமாக கணக்கிட முடியும்.
அதேபோல, இக்கணக்கெடுப்பில் வனப்பணியாளர்கள் தொடர்ந்து 25 நாட்கள் கண்காணிக்கும் களப்பணி மேற்கொள்வார்கள். இக்கணக்கெடுப்பு பணியுடன் புலிகளின் கால்தடம், எச்சம் மற்றும் கீரல்கள் போன்ற மறைமுக கணக்கெடுப்பு பணிக்கான விபரங்களும் சேகரிக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த புலிகள் கணக்கெடுப்புகள் குறித்த பணியாளர்களுக்கான புத்தாக்க பயிற்சி வகுப்பு நாளை 01.10.2020-ம் தேதி காலை 11.00 மணியளவில், ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் ஆரோக்கியராஜ் சேவியர் தலைமையில், அட்டகட்டி வனஉயிரின மேலாண்மை பயிற்சி மையத்தில் நடைபெற உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.