கோவை: பொள்ளாச்சி அருகே பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு முககவசம், கபசுர குடிநீர் கொடுத்து கொரோனா விழிப்புணர்வு செய்த இளைஞருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

நாடு முழுவதும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாள்தோறும் பல நூற்றுக் கணக்கில் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஒரு மாற்றத்தை உருவாக்கும் முனைப்போடு, பொள்ளாச்சி நகர் பகுதியில் வசிக்கும் நவீன்குமார் (28) ஆண்டுதோறும், ஏதோ ஒரு மாற்றத்தை சமூகத்தில் கொண்டு வர வேண்டும் எனும் நோக்கத்தோடு தன் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

அதேபோல், இந்த ஆண்டும் ஏதோ ஒரு சமூக மாற்றத்தை உருவாக்க வேண்டும் எனும் எண்ணத்தில் தனது 28வது பிறந்தநாளான இன்று பொதுமக்களிடையே கொரோனா பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில், பதாகைகளை ஏந்தியவாறு தனது நண்பர்கள் உதவியுடன், பொள்ளாச்சி நகர் பகுதியில் உள்ள பேருந்து நிலையம், கோவை சாலை, காந்தி சிலை சந்திப்பு பகுதிகளில் முக கவசம் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு இலவசமாக முக கவசம் மற்றும் கபசுர குடிநீரை பொதுமக்களுக்கு வழங்கினார்.
மேலும், அவர்களுக்கு கொரோனோ எனும் கொடிய நோயின் பாதிப்பு குறித்து விளக்கமளித்து தன் பிறந்தநாளுக்கு அவர்களிடம் இருந்து பிறந்தநாள் வாழ்த்துக்களையும் பெற்று கொண்டார்.