திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியில் அடிக்கடி விபத்தை ஏற்படுத்தும் பாறை குழியை மூடாத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியில் அடிக்கடி விபத்தை ஏற்படுத்தும் பாறைகுழியை மூடாத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 50வது வார்டு வெள்ளியங்காடு மற்றும் கே.எம் நகர் பகுதியில் உள்ள பாறைகுழியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாகவும், மழைக்காலங்களில் மழை நீரோடு, சாக்கடை நீரும் கலந்து தொற்று நோயை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

இந்நிலையில், இந்த பாறைகுழியை மூட வலியுறுத்தி ஏற்கனவே பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும், ஆறு மாத காலத்தில் மூடுவதாக வாக்குறுதி அளித்து மூன்று வருடங்களுக்கு மேலாகியும் நடவடிக்கை எடுக்காத காரணத்தைச் சுட்டிக்காட்டி அப்பகுதி பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று வெள்ளியங்காடு நால்ரோடு பகுதியில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தையடுத்து, பொது மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட வந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து, காவல்துறையினர் மாநகராட்சி நிர்வாகத்தோடு பேசி உடனடியாக பாறைக்குழியை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.