கோத்தகிரியில் அரிதின் அரிதான பிராண்டட் ராயல் (branded royal) பட்டாம் பூச்சி தென்பட்டுள்ளது..! ஆர்வலர்கள் மகிழ்ச்சி

நீலகிரி: பல்லுயுரி வளம் கொண்ட நீலகிரி மலைத்தொடரில் 130 ஆண்டுகளுக்கு பின் அரிதான வண்ணத்துப்பூச்சி ஒன்று பதிவு செய்யப்பட்டு இருப்பது வன உயிரி ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.









நீலகிரி: பல்லுயுரி வளம் கொண்ட நீலகிரி மலைத்தொடரில் 130 ஆண்டுகளுக்கு பின் அரிதான வண்ணத்துப்பூச்சி ஒன்று பதிவு செய்யப்பட்டு இருப்பது வன உயிரி ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மலைகளாலும், வன உயிரிகளின் இருப்பிடமாகவும், பல்லுயிரிகள் வாழும் இடமாக இருப்பது நீலகிரி மாவட்டமாகும். அடிக்கடி மலை பெய்தாலும் பறவைகளும், பட்டாம் பூச்சிகளும் வாழ நல்ல சீர்தோஷ்ண நிலையினை கொண்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை பொறுத்தவரை இன்னும் பதிவு செய்யப்படாத உயிரினங்கள் ஏராளம். ஒவ்வொரு நாளும் புது புது உயிரினங்கள் வெளி உலகிற்கு வந்து கொண்டு இருக்கிறது. 

இன்றைய காலகட்டத்தில் உலக வெப்பமயமாதல், காலநிலை மாற்றம், காடழிப்பு போன்ற அச்சுறுத்து நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற இடர்பாடுகளை உடனுக்குடன் காட்ட சூழ்நிலை காரணியாக வண்ணத்துப்பூச்சிகள் இருக்கின்றன. அதிகமாக வண்ணத்துப்பூச்சி உருவாகும் போது, வளமான காடுகள் உருவாவதாக அர்த்தம். இதன் மூலம் நல்ல மழைப் பொழிவு ஏற்பட்டு, சுற்றுச்சூழல் சீராக வைக்க உதவுகிறது. கிட்டத்தட்ட சங்கிலி போன்ற அமைப்பே இந்த பல்லுயுரி சூழ்நிலை மண்டலமாகும்.

இந்நிலையில், இந்தியாவில் அரிதின் அரிதாக காணப்படும் பிராண்டட் ராயல் (branded royal)(Tajuria melastigma) பட்டாம் பூச்சியை கோத்தகிரி மலை பகுதியில் புகைப்படம் எடுத்துள்ளார் விண்டர்-பிளைத் சங்கத்தின்( Wynter-Blyth Association)நிர்வாகியான வினோத் ஸ்ரீராமுலு.



இது குறித்து மேலும் அவரிடம் பேசிய போது, இந்த வகை வண்ணத்துப்பூச்சி இந்தியாவில் 1888ம் ஆண்டு ஜி. எஃப் ஹாம்சன் என்பவரால் பதிவு செய்யப்பட்டது. அதன்பின் 2020 ல் பதிவு செய்து இருக்கிறோம். நீலகிரி, திண்டுக்கல், கேரளா மற்றும் கர்நாடகா பகுதிகளில் மட்டுமே பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. பிராண்ட் ராயல் எனப்படும் வண்ணத்துப்பூச்சி மிக அறிய வகை இனமாகும். இவற்றை போலவே வேறு சில வகைகளும் உண்டு. அப்படி இருக்க இந்த வண்ணத்துப்பூச்சி முட்டையிடும் தாவரமும் அறிய வகையாகத்தான் இருக்கும்.

சுமார் 130 ஆண்டுகளுக்கு பிறகு தென்பட்ட வண்ணத்துப்பூச்சியாக இருப்பதால் இப்பகுதியில் அவை வாழுவதற்கான சூழ்நிலை நிலவுகிறது. இது போன்ற அரிய உயிரினங்களும், அதை சார்ந்து இருக்கும் தாவரங்களும் காணப்படுவதால் அந்த பகுதியே வளமானதாக மாற வாய்ப்பு இருக்கிறது. எனவே, அவற்றை ஆய்வு செய்து பாதுகாக்க வழிவகை செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...