நீலகிரி: குன்னூரில் வனப்பகுதியில் இருந்து குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த காட்டெருமை, செல்ஃபி எடுக்க முயன்ற மாணவியை ஆவேசமாக விரட்டியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்ததால், குன்னூர் நகரப்பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு அருகாமையில் புல் அதிகளவில் வளர்ந்து பசுமையாக காட்சியளிக்கிறது.

இந்நிலையில், இதனை உண்பதற்காக அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து மிகப்பெரிய காட்டெருமை ஒன்று, குன்னூர் காமராஜபுரம் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது.

அப்போது, ஆர்வக்கோளாறு காரணமாக மாணவி ஒருவர் காட்டெருமையுடன் செல்ஃபி எடுக்க முயன்றபோது, காட்டெருமை ஆவேசமாக அந்த மாணவியை தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர், சுமார் 2 மணி நேரம் அப்பகுதியில் இருந்த காட்டெருமை வீட்டின் முன்பகுதி கேட்டின் வழியாக வெளியே வந்து, அருகில் உள்ள நகராட்சி திட்டக்கழிவு மையத்திற்குள் புகுந்தது.
வனப்பகுதியில் இருந்து அவ்வப்போது இந்த காட்டெருமை ஊருக்குள் வருவது வாடிக்கையாகிவிட்டது. இதனிடையே, அருகில் உழவர் சந்தை இருப்பதால் தினந்தோறும் ஏராளமான மக்கள் காய்கறி வாங்க வரும் நிலையில், மனிதர்களை தாக்கி அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பு இந்த காட்டெருமையை வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.