கோவை: கோவை ஆனைமலை அருகே தடுப்பணையில் மூழ்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆனைமலை அருகே உள்ள மாகாளியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் மணி (27) கூலி தொழிலாளி. இவர் நேற்று ஆனைமலை வழியாக செல்லும் ஆழியார் ஆற்றின் தடுப்பணையில் நண்பர்களுடன் குளிக்கச் சென்றுள்ளார்.
இந்நிலையில், மணி எதிர்பாராத விதமாக தடுப்பணையில் மூழ்கியுள்ளார். இதையடுத்து, நண்பர்கள் கொடுத்த புகாரின் பேரில் பொள்ளாச்சி தீயணைப்புத் துறையினர் மற்றும் பொதுமக்கள் நீரில் மூழ்கிய இளைஞரை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், இன்று உயிரிழந்த நிலையில் மணியன் உடல் மீட்கப்பட்டது. உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.