கோவை: சூலூர் பகுதியில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை தாண்டி திறக்கப்பட்டிருந்த கடைகளுக்கு பேரூராட்சி அதிகாரிகள் சீல் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை: கோவை சூலூர் பகுதியில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை தாண்டி திறக்கப்பட்டிருந்த கடைகளுக்கு பேரூராட்சி அதிகாரிகள் சீல் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மருந்தகம் தவிர்த்து அனைத்து கடைகளும் இரவு 8 மணிக்கு மூடப்பட வேண்டும் என அரசு அறிவித்து உள்ளது.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக சூலூர் பேரூராட்சி மற்றும் போலீசார் அறிவிப்புகள் செய்து வந்த நிலையில், கடந்த 26ம் தேதி சூலூர் காவல் ஆய்வாளர் சூலூர் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, சில பேக்கரிகள் மற்றும் உணவகங்கள் இரவு 9 மணிக்கு மேலாக திறந்து வைத்திருப்பது தெரியவந்ததை தொடர்ந்து எச்சரிக்கை விடப்பட்டது. இதனை தொடர்ந்து, நேற்று பேரூராட்சி செயல் அலுவலருக்கு இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு சூலூர் காவல் ஆய்வாளர் சுந்தரபாண்டியன் அறிக்கை சமர்ப்பித்தார்.

இதையடுத்து, ஆய்வாளர் அறிக்கையின்படி குறிப்பிட்ட அந்த கடைகளை பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் ஆய்வு மேற்கொண்டதில், குறிப்பிட்ட கால அளவை தாண்டி கடைகள் திறந்து வைத்திருப்பது தெரியவந்ததை தொடர்ந்து, அதிகாரிகள் கடைகளுக்கு இன்று சீல் வைத்தனர்.
சீல் வைக்கப்பட்ட கடைகளில் ஒன்று தமிழக வணிகர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் மண்டலத் தலைவர் டி.ஆர்.சந்திரசேகர் என்பவரின் கடையும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து, மறுநாள் காலை தமிழக வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பினர் சூலூர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் கோவை மாவட்ட தலைவர் இருதய ராஜா தலைமையில் சூலூர் பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமாரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
அதில் கடைகள் அடைக்கப்பட்டு கிடப்பது தங்களுக்கு அவமானமாக உள்ளது எனவும் விதிகளை மீறி திறந்து வைத்திருக்கும் கடைகளுக்கு அபராதம் விதிக்கலாம், சீல் வைக்கக் கூடாது எனக்கூறி பேரூராட்சி செயல் அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.
இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் கூறுகையில், தினமும் வியாபாரிகள் இரவு எட்டு மணிக்கு மேல் கடைகளை திறந்து வைக்க கூடாது என அறிவுறுத்தி வந்தோம். குறிப்பிட்ட சில கடைகளில் வாடிக்கையாளர்கள் முக கவசம் அணியாமலும், விற்பனையாளர்கள் கையுறை அணியாமல் கொரோனா நோய் தொற்றை பரப்பும் விதத்தில் செயல்படுவதாக கூறியவர், சூலூர் காவல் ஆய்வாளர் நடத்திய ஆய்வின் அடிப்படையில், அவர் அளித்த அறிக்கையின்படி திங்கட்கிழமை இரவு குறிப்பிட்ட மூன்று கடைகளை ஆய்வு நடத்தி சீல் வைத்ததாக தெரிவித்தார்.
இது குறித்து சீல் வைக்கப்பட்ட கடை ஊழியர்கள் கூறுகையில், சனிக்கிழமை இரவு வணிக நேரம் கடந்த நிலையில், சூலூர் காவல் துறையைச் சேர்ந்த காவலர்கள் கடைக்கு வந்து பொருள்கள் கேட்டதாகவும், ஆனால் தற்போது கடையில் இருப்பு கணக்கெடுப்பு நடைபெற்று வருவதால் நாளை வந்து பெற்றுக் கொள்ளுமாறு கூறியதால் காவலர்களுக்கும் கடை ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறினர். மேலும், திங்கட்கிழமை மதியம் கடைக்கு வந்த காவலர்கள் கடைக்கு சீல் வைக்காமல் விடமாட்டோம் என்று மிரட்டிச் சென்றதாக தெரிவித்தனர்.