கோவை: கோவை உக்கடம் மேம்பால பணிகள் 65 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கோவை உக்கடம்-ஆத்துபாலம் சாலை பொள்ளாச்சி செல்வதற்கும், குனியமுத்தூர் வழியாக கேரளா மாநிலம் செல்வதற்கும் முக்கிய சாலையாக உள்ளது. இச்சாலையில் நிலவி வந்த போக்குவரத்து நெரிசல் காரணமாக உக்கடம்-ஆத்துபாலம் இடையே 1.9 கிலோ மீட்டர் தூரம் மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் துவங்கியது.
முதல் கட்டமாக உக்கடம் முதல் கரும்புக்கடை இடையே உள்ள மேம்பால பணிகளுக்கு ரூ.216 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. உக்கடம் - கரும்புக்கடை வரை 55 தூண்கள் அமைக்கப்பட்டு, அதில் ஓடுதளம் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேலும், உக்கடம் பேருந்து நிலையம் அருகே மேம்பாலத்தில் ரவுண்டான அமைப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘உக்கடம்- கரும்புக்கடை இடையே முதல் கட்ட மேம்பால பணிகள் 65 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. பேருந்து நிலையம் அருகே மேம்பாலம் அமைக்கும் பணி மிகவும் வேகமாக நடந்து வருகிறது. இன்னும் 6 மாத காலத்திற்குள் முதல் கட்ட மேம்பால பணிகள் முற்றிலும் நிறைவடையும்.
இதற்கு இடையில் இரண்டாம் கட்ட மேம்பால பணிகள் கரும்புக்கடை - ஆத்துப்பாலம் வரை விரைவில் துவக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உக்கடம்-ஆத்துபாலம் மேம்பாலத்தில் வாகன ஓட்டிகள் வசதிக்காகவும், மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும் மூன்று இடங்களில் இறங்குதளங்கள் அமைக்கப்பட உள்ளன. போத்தனூர் பிரிவு, ஆத்துபாலம், உக்கடம் பேருந்து நிலையம் ஆகிய மூன்று பகுதிகளில் யூ வடிவிலான ஏறுதளம் மற்றும் இறங்குதளங்கள் அமைக்கப்பட உள்ளன.
மேலும், பொள்ளாச்சியில் இருந்து வரும் வாகனங்கள் போத்தனூர் பிரிவு இறங்குதளத்தை பயன்படுத்தி டவுன்ஹால் செல்லலாம், உக்கடம் பேருந்து நிலையம் இறங்குதளம் மூலம் சுங்கம் பைபாஸ் செல்லலாம், ஆத்துபாலம் இறங்குதளம் மூலம் பாலக்காடு சாலை செல்லலாம். இதனால் போக்குவரத்து நெரிசல் குறையும், வாகன ஓட்டிகளும் பயன் அடைவார்கள்,’’ என்று தெரிவித்தார்.