நீலகிரியில் இன்று புதிதாக 149 பேருக்கு கொரோன தொற்று..! மொத்த பாதிப்பு 4,093 ஆக உயர்வு!

நீலகிரி: நீலகிரியில் இன்று புதிதாக 149 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


நீலகிரி: நீலகிரியில் இன்று புதிதாக 149 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தொற்றுடைய நபர்கள் வெளியே சென்று வருவதால் மாவட்டத்தில் தொற்று பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் இன்று மேலும் 149 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நீலகிரியில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,093 ஆக உயர்ந்துள்ளது.

இதையடுத்து, தொற்று உறுதியாகியுள்ள பகுதிகளில் கிருமி நாசினி தெளித்து பாதுகாப்பு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே, நீலகிரி மாவட்டத்தில் இன்று 126 பேர் நோய் தொற்றில் இருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் இதுவரை 3,115 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், 953 பேர் மருத்துவமனையில் கொரோனா தொற்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நீலகிரியில் இதுவரை கொரோனாவுக்கு 25 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 48.07 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 29.59 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 11ஆம் தேதி நிலவரப்படி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நிலவரம்

கோவை மாவட்டத்தில் ஜூலை 11 நிலவரப்படி ஆழியாறு அணையில் 55.4 அடி, பரம்பிக்குளம் அணையில் 18.24 அடி, சோலையாறு அணையில் 91.21 அ...

கோவையில் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவுக்கு இறுதி வாய்ப்பு; ஜூலை 31-க்குள் நிறைவு செய்ய அறிவுறுத்தல்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 3.97 லட்சம் பயனாளிகள் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவு செய்யாமல் நிலுவையில் உள்ளனர். ஜூலை 31, 20...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...