திருப்பூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 153 பேருக்கு தொற்று - மொத்த பாதிப்பு 8,023 ஆக உயர்வு!

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 153 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 153 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தீவிரமடைந்துள்ளதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 153 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 8,023 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே, திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று சிகிச்சை பெற்று வந்த 204 பேர் குணமடைந்தனர். இதன் மூலம் திருப்பூரில் இதுவரை 6,309 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதேபோல, திருப்பூரில் இன்று கொரோனா தொற்று சிகிச்சை பலனின்றி இன்று மேலும் 2 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றுக்கு 131 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 1,583 பேர் நோய் தொற்று பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோவை மாவட்டத்தை தொடர்ந்து, தற்போது திருப்பூரிலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 48.07 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 29.59 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 11ஆம் தேதி நிலவரப்படி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நிலவரம்

கோவை மாவட்டத்தில் ஜூலை 11 நிலவரப்படி ஆழியாறு அணையில் 55.4 அடி, பரம்பிக்குளம் அணையில் 18.24 அடி, சோலையாறு அணையில் 91.21 அ...

கோவையில் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவுக்கு இறுதி வாய்ப்பு; ஜூலை 31-க்குள் நிறைவு செய்ய அறிவுறுத்தல்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 3.97 லட்சம் பயனாளிகள் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவு செய்யாமல் நிலுவையில் உள்ளனர். ஜூலை 31, 20...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...