கோவை அத்திபாளையம் அருகே சிறுவனுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைப்பு!

கோவை: கோவை அத்திபாளையம் அருகே சிறுவனுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


கோவை: கோவை அத்திபாளையம் அருகே சிறுவனுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் டேனியல் (54). சமையல் வேலை செய்யும் இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அத்திபாளையம் பகுதியில் வீடு எடுத்து தங்கி உள்ள இவர், கடந்த ஒரு மாதமாக அத்திபாளையம் பகுதியில் உள்ள மெஸ் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த 28ம் தேதி எட்டு வயது சிறுவனை வீட்டுக்கு அழைத்து வந்தவர், அந்த சிறுவனுக்கு தங்கியிருந்த வீட்டின் மாடிக்கு அழைத்துச் சென்று பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து உள்ளார். இது குறித்து சிறுவன் தன் தாயிடம் கூறியதை தொடர்ந்து, கோவில்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

போலீசாரின் விசாரணையில் ஒரு வார காலமாக சிறுவனுக்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து, டேனியல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுவனை பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Newsletter

கோவையில் இரண்டு மாத ஊதியம் தராததால் உரிமைத் திட்டப் பணியாளர்கள் போராட்டம்

கோவையில் தமிழ்நாடு உரிமைத் திட்டத்தில் பணியாற்றும் 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததால்...

கவுண்டம்பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி: நாளை பல பகுதிகளில் மின்தடை

கவுண்டம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இதனால்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை காலை 11 மணிக்கு மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது...

வாளையார் சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: கணக்கில் வராத ரூ.1.13 லட்சம் பறிமுதல்

கோவை மாவட்டம் வாளையார் சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய திடீர் சோதனையில், மோட்டார் வாகன ஆய்வாளர் உள்...

ஆம்புலன்ஸில் 21 கிலோ கஞ்சா கடத்தல்; கோவையில் இருவர் கைது

கோவை மாநகர காவல்துறையின் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீசார், உக்கடம்–வாலாங்குளம் மேம்பாலம் சாலையில் வாகனத் தணிக்...

பேரூராட்சி தலைவரிடம் சாலை, வடிகால் வசதி கோரிக்கை மனு அளித்த இடிகரை மகாலட்சுமி கார்டன் மக்கள்

இடிகரை பேரூராட்சி மணியக்காரன்பாளையம் வார்டு 6-க்கு உட்பட்ட மகாலட்சுமி கார்டன் பகுதியில் சாலை மற்றும் வடிகால் வசதி இல்லாத...