தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் - அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் கருத்து

திருப்பூர்: தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும், என மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் திருப்பூரில் பேட்டி அளித்துள்ளார்.

திருப்பூர்: தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும், என மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ்

திருப்பூரில் பேட்டி அளித்துள்ளார். 



திருப்பூரில் தனியார் தொண்டு நிறுவனம் மூலம் கொரோனா ஊரடங்கு காலத்தில் சேவைகள் செய்தவர்களை கௌரவிக்கும் விதமாக, கேடயங்கள் வழங்குதல் மற்றும் நல உதவிகள் செய்யும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில், பள்ளியை தற்போதைய சூழலில் திறப்பது சரியான முடிவாக இருக்காது எனவும் ஜனவரி மாதத்திற்கு பிறகு பள்ளிகளை திறக்கலாம் என தெரிவித்தார். 



அதுவரையில், ஆன்லைன் மற்றும் கல்வி சேனல் வாயிலாக வகுப்புகளை நடத்த அரசு பரிந்துரைக்க வேண்டும் எனவும் தமிழக அரசு தனது முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும், என தெரிவித்தார். 



மத்திய அரசின் விவசாய மசோதாவின் எதிர்ப்பு குறித்து பதில் அளித்த பொன்ராஜ், விவசாய மசோதா விவசாயிகளை கூலிகளாக மாற்றும் எனவும் இதில் விவசாய பொருட்களுக்கான குறைந்த பட்ச விலை குறித்த அறிவிப்பு இல்லை, எனவும் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...