ஆனைமலை காடர் இன மக்களுக்கு மாற்று இடம் வழங்கும் விவகாரம்: தெப்பகுளமேட்டில் நில அளவை பணி தீவிரம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை தொடரில் முதுவர், மலைமலசர், காடர், புலையர், ஏர்வாளர் போன்ற பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை தொடரில் முதுவர், மலைமலசர், காடர், புலையர், ஏர்வாளர் போன்ற பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

கடந்த 2019, ஆகஸ்ட் மாதத்தில், இடைவிடாது பெய்த கனமழையால் கல்லார் பழங்குடி கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு ஒட்டுமொத்த கிராமமே அழிவை சந்தித்தது. இதனை அறிந்த, வருவாய் துறையும், வனத்துறையும் மாற்று இடமான தாய்மடி எஸ்டேட் பகுதியில் தற்காலிகமாக இடம் அமைத்து கொடுத்தனர். எனினும், அப்பகுதியில் அவர்களுக்கு எவ்வித உரிமைகள் மற்றும் வசதி இன்றி கடும் அவதிப்பட்டு வந்தனர். 



சொந்த இடத்தில் வீடுகள் அமைத்து தர கோரி வலியுறுத்தி, கடந்த பிப்ரவரி மாதம் 10 ம் தேதி வால்பாறையில் இருந்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க நடை பயணம் மேற்கொண்ட பழங்குடியினர், தடுத்து நிறுத்தப்பட்டு, கைது செய்யப்பட்டனர். 

இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ம் தேதி சுதந்திர தினமன்று, தங்களின் மூதாதையரின் பாரம்பரிய வசிப்பிடமான தெப்பகுளம்மேடு பகுதியில் குடியேறும் போராட்டத்தை நடத்தினார்கள். மேலும், இது குறித்து கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கும் அனுப்பி வைத்தனர்.



இதன்படி, வன உரிமைச் 2006 சட்டத்தின்படி, கல்லார் கிராமத்தின் பாரம்பரிய கிராமசபை தீர்மானத்தின்படி, சேதமடைந்த பழைய கிராமத்திற்கு பதிலாக தெப்பகுளமேடு பகுதியில் புதியதாக கிராமம் அமைத்திடவும், அதற்குத் தேவையான நிலத்தை வழங்கிட வனத்துறை ஒப்புக்கொண்டது. இதற்காக, சிறப்பு அறிக்கையை தயார் செய்த ஆனைமலை புலிகள் காப்பகம் மேல் நடவடிக்கை மற்றும் ஒப்புதல் பெறுவதற்காக, தேசிய புலிகள் காப்பக ஆணையத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மூலம் அனுப்பி வைத்தனர். 

இந்த நிலையில், கடந்த வாரம் புதிதாக இடம் வழங்கப்பட இருக்கும் தெப்பக்குளமேடு பகுதிக்கு நில உரிமை கோரும் விண்ணப்பங்கள், கல்லார் காடர் மக்களிடம் இருந்து பெறப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, கல்லார் மக்களுக்கு தெப்பக்குளமேட்டில் மாற்று இடம் வழங்குவதற்காக, இன்று 23 குடும்பங்களுக்கும் நில அளவைப் பணி செய்யப்பட்டது.

இப்பணியில், வருவாய் துறை, வனத்துறை, மற்றும் நில அளவைத் துறையினர் இணைந்து சுமார் 15 பேர் கொண்ட குழுவினர் தெப்பக்குளமேடு பகுதியில் பணிகள் மேற்கொண்டனர்.

ஆனைமலை புலிகள் சரணாலய உள்பட்ட பகுதியில் அமைந்துள்ள கிராமங்களுக்கு மாற்று இடம் வழங்க முடியாது, என்று வனத்துறையினர் கூறிவந்த நிலையில் கல்லார் மக்களுக்கு 2006 வன உரிமைச் சட்டத்தின்படி பாரம்பரிய கிராம சபையின் தீர்மானத்தின்படி மாற்று இடத்திற்கான நில அளவை செய்தனர்.

இதன் மூலம், கல்லார்குடி மக்கள் மாற்று இடம் கோரி கடந்த ஒரு வருடமாக தொடர்ச்சியாக அறவழியில் போராடி வந்ததற்கு சிறு வெளிச்சம் கிடைத்துள்ளது என்று தெரிவித்துள்ளனர். 

Newsletter

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...

அமராவதி அணை நீர்மட்டம் 48.07 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 29.59 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 11ஆம் தேதி நிலவரப்படி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நிலவரம்

கோவை மாவட்டத்தில் ஜூலை 11 நிலவரப்படி ஆழியாறு அணையில் 55.4 அடி, பரம்பிக்குளம் அணையில் 18.24 அடி, சோலையாறு அணையில் 91.21 அ...

கோவையில் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவுக்கு இறுதி வாய்ப்பு; ஜூலை 31-க்குள் நிறைவு செய்ய அறிவுறுத்தல்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 3.97 லட்சம் பயனாளிகள் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவு செய்யாமல் நிலுவையில் உள்ளனர். ஜூலை 31, 20...