பொள்ளாச்சி சுற்றுவட்டராத்தில் மரவள்ளி கிழங்கு அறுவடை தீவிரம்: கேரள வியாபாரிகள் வருகை இல்லாததால் விலை சரிவு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தென்னைக்கு அடுத்த படியாக மானாவாரி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். அதிலும், குறிப்பாக, தமிழக கேரள எல்லயைில் பொள்ளாச்சி உள்ளதால், கேரள மக்கள் விரும்பி உண்ணும் மரவள்ளிகிழங்கு, நேந்திரன் வாழை உள்ளிட்டவை இங்கு அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தென்னைக்கு அடுத்த படியாக மானாவாரி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். அதிலும், குறிப்பாக, தமிழக கேரள எல்லயைில் பொள்ளாச்சி உள்ளதால், கேரள மக்கள் விரும்பி உண்ணும் மரவள்ளிகிழங்கு, நேந்திரன் வாழை உள்ளிட்டவை இங்கு அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. 



இதில் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளான, குள்ளக்கபாளையம், குறும்பபாளையம், தேவம்பாடிவலசு, வடக்கிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1500 ஏக்கர் பரப்பளவில், மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யப்படுள்ளது. கடந்த ஜனவரி மாதம் பயிரிடப்பட்ட மரவள்ளிக்கிழங்கை, அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து, விவசாயிகள் கூறுகையில், 9 மாத பயிரான மரவள்ளிக்கிழங்கு, ஒரு ஏக்கரில் சுமார் 12 முதல் 15 டன் வரை உற்பத்தி செய்யப்படுகிறது.  நடவு,  களை எடுத்தல் போன்ற பணிகளுக்கு, ஐம்பதாயிரம் ரூபாய் வரை செலவாகிறது.  

கடந்த ஆண்டு வரையிலும், ஒரு டன்னுக்கு பதினெட்டாயிரம் ரூபாய் வரை விலை கிடைத்து வந்தது. ஆனால், இந்த ஆண்டு, கொரோனா நோய் பாதிப்பு காரணமாக, தமிழக - கேரள என இரு மாநில போக்குவரத்து தடைபட்டுள்ளதால், கேரள வியாபாரிகள் கொள்முதல் செய்ய வருவதில்லை.

இதனால் தேனி, மதுரை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வரும் வியாபாரிகள், 9000 முதல் 13,000 ரூபாய் வரும் வரை மட்டுமே கொள்முதல் செய்கின்றனர். ஏற்கனவே, எலி, பெருக்கான் மற்றும் மயில் தொல்லைகளால் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், கேரள வியாபாரிகள் வருகை இல்லாததால், தற்போது ஏக்கர் ஒன்றுக்கு சுமார் ரூபாய் 5000 வரை நஷ்டம் ஏற்பட்டு வருவதாக விவசாயிகள், வேதனை தெரிவித்துள்ளனர்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 48.07 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 29.59 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 11ஆம் தேதி நிலவரப்படி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நிலவரம்

கோவை மாவட்டத்தில் ஜூலை 11 நிலவரப்படி ஆழியாறு அணையில் 55.4 அடி, பரம்பிக்குளம் அணையில் 18.24 அடி, சோலையாறு அணையில் 91.21 அ...

கோவையில் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவுக்கு இறுதி வாய்ப்பு; ஜூலை 31-க்குள் நிறைவு செய்ய அறிவுறுத்தல்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 3.97 லட்சம் பயனாளிகள் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவு செய்யாமல் நிலுவையில் உள்ளனர். ஜூலை 31, 20...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...