கோவை: கோவை மத்திய சிறையில் கடந்த 6 மாதத்தில் 3 லட்சம் முகக்கவசங்களை கைதிகள் தயாரித்துள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

கொரோனா வைரஸ் தொற்று பரவலில் இருந்து காத்துக் கொள்ள அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, கோவை மத்திய சிறை வளாகத்தில் கைதிகள் முகக்கவசம் தயாரிப்பில் ஈடுபட்டனர்.
இது குறித்து சிறைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘கடந்த 6 மாதங்களாக 10க்கும் மேற்பட்ட கைதிகள் மூலமாக 3 லட்சம் முகக்கவசங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் போலீசாருக்கு மட்டும் வழங்கப்பட்டன. பின்னர், பல்வேறு துறைகளுக்கு விற்பனை செய்யப்பட்டன. இதுவரை 2 லட்சத்து 10 ஆயிரம் முகக்கவசங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. துவக்கத்தில் 10 ரூபாய்க்கு விற்கப்பட்ட முகக்கவசம், தற்போது ரூ.5க்கு விற்பனை செய்யப்படுகின்றன," என்று தெரிவித்தனர்.