பொள்ளாச்சியில் உள்ள ஆழியாறு அணையிலிருந்து 9 மதகுகள் வழியாக இன்று மீண்டும் உபரி நீர் வெளியேற்றம்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள ஆழியாறு அணையிலிருந்து 9 மதகுகள் வழியாக இன்று மீண்டும் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.



கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள ஆழியாறு அணையிலிருந்து 9 மதகுகள் வழியாக இன்று மீண்டும் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

மேற்கு தொடர்ச்சி மலைகளில் கடந்த சில தினங்களாக பெய்து வந்த தொடர் மழையால், ஆழியார் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான அப்பர் ஆழியாறு, காடம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

இதனால் கடந்த 20ம் தேதி அணையின் நீர்மட்டம் 118 அடியை எட்டியதையடுத்து, அணையில் இருந்து 7 மதகுகள் வழியாக, 3,625 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது.



இந்நிலையில், நேற்று காலை நிலவரப்படி 120 அடி உயரம் கொண்ட ஆழியாறு அணையின் நீர்மட்டம் 119.55 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1,408 கன அடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 800 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது.

இந்த நிலையில், மதியம் 2 மணி அளவில் அணைக்கு நீர்வரத்து திடீரென உயர்ந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 119.70 அடியை எட்டியது. பாதுகாப்பு கருதி 9 மதகுகள் வழியாக வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. அணையின் நீர் வரத்தைப் பொறுத்து, உபரி நீர் வெளியேற்றம் குறைக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...

அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 10ஆம் தேதி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள பரம்பிக்குளம், சோலையாறு மற்றும் ஆழியார் அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் படிப்படியா...