முத்தண்ணன் குளக்கரையில் வசிக்கும் 300 பேருக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யும் பணி தீவிரம்

முத்தண்ணன் குளக்கரையில் வசிக்கும் 300 பேருக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யும் பணி தீவிரம்

கோவை: கோவை முத்தண்ணன் குளக்கரையில் வசிக்கும் 300 நபர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக, மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், கோவை முத்தண்ணன் குளத்தை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ், கோவை மாநகராட்சி அக்குளக்கரையில் வசித்து வந்த சுமார் 1800 வீடுகளை அப்புறப்படுத்தும் பணிகளை மேற்கொண்டனர்.



அங்கு வசித்து வந்த மக்களுக்கு, மலுமிச்சம்ப்பட்டி, கீரணத்தம் போன்ற இடங்களில், குடிசை மாற்று வாரியத்தால் மாற்று வீடுகள் ஏற்பாடு செய்யப்பட்டது.

தொடர்ந்து, பொதுமக்கள் இந்த வீடுகளை காலி செய்துவிட்டு அரசு ஒதுக்கிய வீடுகளுக்கு குடி பெயர்ந்தனர்.

இதனிடையே, குளக்கரையை ஆக்கிரமித்து வீடு கட்டிய ஒரு தரப்பினர் மட்டும் வீடுகளை இடித்து அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து, குளக்கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகளை இடித்து அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.



இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், குளக்கரையில் வசிப்பவர்கள் 4 வாரங்களுக்குள் குடிசை மாற்று வாரியத்தை அணுகி வீடுகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அதன் பின்னர், மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்து அகற்ற வேண்டும், என்று உத்தரவிட்டடது.

இது குறித்து கோவை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்:

கோவை முத்தண்ணன் குளக்கரையில் 1,800 வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ளன. இவர்களுக்கு குடிசை மாற்று வாரியம் சார்பில் உக்கடம்,மலுமிச்சம்பட்டி கீரணத்தம் உள்ளிட்ட இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், 1,500 குடும்பங்களுக்கு மாற்று வீடுகள் வழங்கப்பட்டு விட்டன. அவர்கள் அங்கே, குடிபெயர்ந்து சென்றுவிட்டனர்.

இதனிடையே, ஆக்கிரமிப்பு வீடுகளில் வசிக்கும் சிலர் தங்களுக்கு வீடு வேண்டாம், அதற்கு பதிலாக நிலம் ஒதுக்க வேண்டும் என்று கோரி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதன் காரணமாக, ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்து அகற்றும் பணி நிறுத்திவைக்கப்பட்டது. தற்போது, ஐகோர்ட்டு உத்தரவிட்டதைத் தொடர்ந்து மீதமுள்ள 300 குடும்பங்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யும் பணி தீவிரப்படுத்தப் பட்டுள்ளது, என்றார்.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...