திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு கொரோனா; மருத்துவமனையில் அனுமதி
சென்னை: திமுக அமைப்பு செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான,ஆர்.எஸ்.பாரதிக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடந்த, மாநிலங்களவை கூட்டத்தில் கலந்து கொள்ள இருந்த அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என அறியப்பட்டது. இதையடுத்து, அவர் டெல்லி பாராளுமன்ற கூட்டத் தொடரில் கலந்துக் கொண்டு சென்னை திரும்பினார்.
அவருக்கு, தொண்டையில் கரகரப்பு ஏற்படவே,அவர் கொரோனா பரிசோதனை செய்த போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, ஆர்.எஸ். பாரதி ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தமிழகத்தில் அடுத்தடுத்து அரசியல் பிரமுகர்கள், எம்பி மற்றும் எம் எல் ஏக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவதும், தமிழகத்தில் இதுவரை5.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், என்பது குறிப்பிடத்தக்கது.