கோவையில் அம்மா நகரும் ரேஷன் கடை சேவையை தொடங்கி வைத்தார் அமைச்சர் எஸ் பி வேலுமணி

கோவை: கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் அம்மா நகரும் நியாய விலை கடை வாகனங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக முதல்வரால் துவக்கி வைக்கப்பட்டது.



கோவை: கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் அம்மா நகரும் நியாய விலை கடை வாகனங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக முதல்வரால் துவக்கி வைக்கப்பட்டது.

இதில், கோவை மாவட்டத்திற்கு 33 அம்மா நகரும் நியாய விலைக்கடை வாகனங்கள் வழங்கப்பட்டன. இந்த நிலையில், தொண்டாமுத்தூர் பகுதியில் அம்மா நகரும் நியாய விலை கடை வாகனத்தை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இது குறித்து, அமைச்சர் எஸ்.பி வேலுமணி கூறுகையில்:

நோய் தொற்று பரவல் காரணமாக நியாயவிலை கடைகளில் பொதுமக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்கவே, அம்மா நகரும் நியாய விலை கடை வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இனி, பொதுமக்கள் அவர்கள் வீட்டிலேயே இருந்து நியாயவிலை கடைகளில், என்னென்ன பொருட்கள் கிடைக்குமோ, அவை அனைத்தையும் இந்த வாகனத்தில் பெற்றுக்கொள்ளலாம். பொது மக்களிடையே, இந்த திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என தெரிவித்தார்.

மேலும், தொண்டாமுத்தூர் பகுதியில் பயணிகள் பேருந்து நிழற்குடை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்த அமைச்சர், அங்குள்ள பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி மாத்திரைகள் அடங்கிய தொகுப்புகளை வழங்கினார்.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...