மைக்ரோ பைனான்ஸ் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை கோரி மாதர் சங்கத்தினர் கோவை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியல்!

கோவை: மைக்ரோ பைனான்ஸ் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை கோரி மாதர் சங்கத்தினர் கோவை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: மைக்ரோ பைனான்ஸ் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை கோரி மாதர் சங்கத்தினர் கோவை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கொரோனா ஊரடங்கின் போது மத்திய அரசு வங்கி மற்றும் மைக்ரோ பைனான்ஸ் நிதி நிறுவனங்களில் கடன் தவணை தொகைகளை கட்டுவதற்கான கால அவகாசம் வழங்கியது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் வாங்கிய கடனை கட்டச்சொல்லி மகளிர் சுய உதவிக்குழுவினரை ஆபாசமாக பேசியும், மிரட்டியும் வசூல் செய்து வருவதாக பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டினர்.

மேலும், வாங்கிய கடனை திருப்பி செலுத்த போதிய கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து, மாநிலம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் மூன்று முறைக்கு மேல் மாதர் சங்கத்தின் சார்பாக மனு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், மைக்ரோ பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் உடனடியாக பணத்தை செலுத்த கூறி காலை மற்றும் இரவு நேரகளில் கடன் பெற்றவர்களின் வீட்டிற்கு வந்து மிரட்டுவது தொடர்ந்து வருவதாக குற்றம் சாட்டினர்.



இதற்கிடையே, கோவையில் இந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் ராதிகா தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.



இதனை தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. திடீர் சாலை மறியல் காரணமாக அந்த பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து, மைக்ரோ பைனான்ஸ் நிதி நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், கடனை திருப்பி செலுத்த 6 மாத காலம் அவகாசம் வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

Newsletter

கோவையில் பகுதி நேர வேலை தேடி சென்ற கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட வழக்கு; தவெகவினர் 3 பேர் கைது

கோவை பேரூர் அருகே வேலை தேடி உணவகத்திற்குச் சென்ற கல்லூரி மாணவரை, பார்சல் கட்டித் தர மறுத்ததாகக் கூறி தாக்கிய வழக்கில், த...

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...