பொள்ளாச்சி ஆனைமலையில் ரிசார்ட் உரிமையாளரிடம் பணமோசடி: கேரளாவை சேர்ந்த முக்கிய குற்றவாளி கைது

கோவை: பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் ரிசார்ட் உரிமையாளரிடம் பணமோசடி செய்த வழக்கில், கேரளாவைசேர்ந்த முக்கிய குற்றவாளி கைது.


கோவை: பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் ரிசார்ட் உரிமையாளரிடம் பணமோசடி செய்த வழக்கில், கேரளாவைசேர்ந்த முக்கிய குற்றவாளி கைது.

இதுவரை இந்த வழக்கில், ஐந்து பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இவர்களிடமிருந்து, ரூபாய் ஒரு கோடியே 32 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இன்று, கைதான அனுப்குமாரிடம் இருந்து, மூன்று சொகுசுகார்கள், தங்க நகைகள், 35 லட்சத்து 15 ஆயிரம் பணம் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கணபதிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ரிசார்ட் உரிமையாளர் முத்து (67). இவர், தனது ரிசாட்டை விற்பனை செய்த பணத்தை பொள்ளாச்சி, சிங்காநல்லூரில் உள்ள வங்கி லாக்கரில் வைத்திருந்தார்.

இந்நிலையில், கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி வங்கி லாக்கரில் இருந்து 1 கோடியே 72 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு வந்து கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறையில் உள்ள அவரது மற்றொரு வங்கி லாக்கரில் வைப்பதற்காக, அவரிடம் நண்பராக பழகி வந்த கேரளா மாநிலம் கொழிஞ்சாம்பாறையை சேர்ந்த அனுபுகுமார் என்பவரிடம் கொடுத்துள்ளார். ஆனால், அனுபுகுமார், வங்கி லாக்கரில் பணத்தை வைக்காமல் பணத்துடன் தலைமறைவாகினார்.

இது குறித்து, ஆனைமலை போலீசாரிடம் பணத்தை பறிக்கொடுத்த ரிசாட் உரிமையாளர், முத்து கடந்த4 ஆம் தேதி புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் ஆனைமலை போலீசார் வழக்குபதிவு செய்து, விசாரித்து வந்தனர். இந்த வழக்கு தொடர்பாக அனுப்குமாரின் நண்பர்களான கேரளாவை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து, தலைமறைவாக இருந்து வந்த முக்கிய குற்றவாளியான அனுப்குமாரை பிடிக்க மூன்று பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று செம்மணாம்பதி சோதனைசாவடி பகுதியில் போலீசார் வாகன தணிக்கை செய்த போது அங்கு, சொகுசு காரில் வந்த, அனுப்குமார், போலீசாரை பார்த்ததும், துப்பாக்கியை காட்டி மிரட்டி, அங்கிருந்து தப்பிக்க முயன்ற போது, போலீசார் விரட்டி பிடித்தனர்.



பின்பு, அனுப்குமாரை ஆனைமலை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், அவனிடம் இருந்து 3 விலை உயர்ந்த சொகுசு கார்கள், 50 பவுன் தங்க நகைகள் ரூ 35 லட்சத்து 15 ஆயிரம் பணம், நாட்டு துப்பாக்கி, 3 தோட்டா, 4-செல்போன், ஒரு ஆப்பிள் ஐபேடு ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.



இதனையடுத்து, போலீசார் அனுப்குமார் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். ஏற்கனவே, அனுப்குமார் மீது

கேரளா மாநிலத்தில் வழிப்பறி, கடத்தல்,கொள்ளை, மோசடி என 11 வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...