நீலகிரியில் இன்று புதிதாக 88 பேருக்கு கொரோன தொற்று..! மொத்த பாதிப்பு 3,178 ஆக உயர்வு!

நீலகிரி: நீலகிரியில் இன்று புதிதாக 88 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


நீலகிரி: நீலகிரியில் இன்று புதிதாக 88 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தொற்றுடைய நபர்கள் வெளியே சென்று வருவதால் மாவட்டத்தில் தொற்று பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் இன்று மேலும் 88 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நீலகிரியில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,178 ஆக உயர்ந்துள்ளது.

இதையடுத்து, தொற்று உறுதியாகியுள்ள பகுதிகளில் கிருமி நாசினி தெளித்து பாதுகாப்பு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே, நீலகிரி மாவட்டத்தில் இன்று 101 பேர் நோய் தொற்றில் இருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் இதுவரை 2,447 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், 710 பேர் மருத்துவமனையில் கொரோனா தொற்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேபோல, நீலகிரியில் கொரோனா தொற்று சிகிச்சை பலனின்றி இன்று ஒருவர் உயிரிழந்தார். நீலகிரியில் இதுவரை கொரோனாவுக்கு 21 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...

அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 10ஆம் தேதி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்...