கோவை: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா பரிசோதனை மையத்தை மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கோவை: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா பரிசோதனை மையத்தை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவுதலை தடுப்பதற்காக கோவை மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக இன்று கோவை மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு மண்டலம் திருச்சி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள பரிசோதனை மையத்தில் சளி, காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத்திணறல் அறிகுறி உள்ளவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை செய்து, அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர், கொரோனா நோய் தொற்று உள்ளவர்களின் விபரங்கள் பற்றி சுகாதார பணியாளா்களிடம் கேட்டறிந்தார்.

அதனை தொடர்ந்து, சிங்காநல்லார் பேருந்து நிலையத்தில் நடமாடும் கொரோனா பரிசோதனை வாகனத்தில் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வதை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர், அங்கிருந்த பொதுமக்களிடம் கட்டாயம் முகக்கவசங்கள் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்றிட வேண்டும் எனவும், முகக்கவசம் அணியாமல் இருந்தால் அபராதம் விதிக்கும்படி தொடா்புடைய அலுவலர்களிடம் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது கிழக்கு மண்டல உதவி ஆணையர் எம்.முருகன், மண்டல சுகாதார அலுவலா்கள் சந்திரன், மற்றும் பணி மேற்பார்வையாளர், மாநகராட்சி அலுவலா்கள் உடனிருந்தனர்.