கோவையில் தனியார்‌ திருமண மண்டபத்தில்‌ அமைக்கப்பட்டுள்ள கொரோனா பரிசோதனை மையத்தை மாநகராட்சி ஆணையர் ஆய்வு!

கோவை: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில்‌ உள்ள தனியார்‌ திருமண மண்டபத்தில்‌ அமைக்கப்பட்டுள்ள கொரோனா பரிசோதனை மையத்தை மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


கோவை: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில்‌ உள்ள தனியார்‌ திருமண மண்டபத்தில்‌ அமைக்கப்பட்டுள்ள கொரோனா பரிசோதனை மையத்தை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கொரோனா வைரஸ்‌ தொற்று பரவுதலை தடுப்பதற்காக கோவை மாநகராட்சி நிர்வாகம்‌ பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், அதன்‌ தொடர்ச்சியாக இன்று கோவை மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு மண்டலம்‌ திருச்சி சாலையில்‌ உள்ள தனியார்‌ திருமண மண்டபத்தில்‌ அமைக்கப்பட்டுள்ள பரிசோதனை மையத்தில்‌ சளி, காய்ச்சல்‌, இருமல் மற்றும்‌ மூச்சுத்திணறல்‌ அறிகுறி உள்ளவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை செய்து, அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்‌ பணிகள்‌ நடைபெற்று வருவதை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர், கொரோனா நோய்‌ தொற்று உள்ளவர்களின்‌ விபரங்கள்‌ பற்றி சுகாதார பணியாளா்களிடம்‌ கேட்டறிந்தார்.



அதனை தொடர்ந்து, சிங்காநல்லார்‌ பேருந்து நிலையத்தில்‌ நடமாடும்‌ கொரோனா பரிசோதனை வாகனத்தில்‌ பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வதை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர், அங்கிருந்த பொதுமக்களிடம் கட்டாயம்‌ முகக்கவசங்கள்‌ அணிய வேண்டும்‌, சமூக இடைவெளியை பின்பற்றிட வேண்டும்‌ எனவும், முகக்கவசம்‌ அணியாமல்‌ இருந்தால்‌ அபராதம்‌ விதிக்கும்படி தொடா்புடைய அலுவலர்களிடம்‌ தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது கிழக்கு மண்டல உதவி ஆணையர்‌ எம்‌.முருகன்‌, மண்டல சுகாதார அலுவலா்கள்‌ சந்திரன்‌, மற்றும்‌ பணி மேற்பார்வையாளர்‌, மாநகராட்சி அலுவலா்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

கோவையில் முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைகேட்பு மற்றும் தொழில் வாய்ப்பு கருத்தரங்கம்

கோவையில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான சிறப்பு குறைகேட்பு கூட்டம் ஜூலை 17 அன்று நடைபெறுகிறது...

கோவையில் பகுதி நேர வேலை தேடி சென்ற கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட வழக்கு; தவெகவினர் 3 பேர் கைது

கோவை பேரூர் அருகே வேலை தேடி உணவகத்திற்குச் சென்ற கல்லூரி மாணவரை, பார்சல் கட்டித் தர மறுத்ததாகக் கூறி தாக்கிய வழக்கில், த...

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...