நீலகிரி: உதகையில் பெய்து வரும் தொடர் மழையால் வீட்டின் மீது மரம் விழுந்து 3 பேர் படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த காற்றுடன் கூடிய தொடர் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், உதகை பிங்கர் போஸ்ட் அடுத்த VC காலனி பகுதியில் வீட்டின் மீது ராட்சத கற்பூர மரம் விழுந்தது. இதில் வீட்டில் உறங்கி கொண்டிருந்த மதியழகன் (45), பாக்கியலட்சுமி (38), சஞ்சய் (17) ஆகிய 3 பேர் படுகாயங்களுடன் உதகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், அபாயகரமான மரங்களை அகற்ற மாவட்ட நிர்வாகத்திற்கு பல முறை மனு அளித்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், தற்போது மழையின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், அபாயகரமான மரங்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.