கோவையில் தனிமைப்படுத்தபட்ட பகுதிகளில்‌ நடைபெற்று வரும்‌ தூய்மைப்‌ பணிகள்‌ மற்றும்‌ வளர்ச்சிப்பணிகள்‌ குறித்து மாநகராட்சி ஆணைய‌ர் ஆய்வு!

கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில்‌ தனிமைப்படுத்தபட்ட பகுதிகளில்‌ நடைபெற்று வரும்‌ தூய்மைப்‌ பணிகள்‌ மற்றும்‌ வளர்ச்சிப்பணிகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில்‌ தனிமைப்படுத்தபட்ட பகுதிகளில்‌ நடைபெற்று வரும்‌ தூய்மைப்‌ பணிகள்‌ மற்றும்‌ வளர்ச்சிப்பணிகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை மாநகராட்சி கொரோனா வைரஸ்‌ தொற்று பரவுதலை தடுப்பதற்காக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை முழுவீச்சுடன்‌ தொடர்ந்து செயல்படுத்திக்‌ கொண்டு வருகிறது.

இந்த நிலையில், அதன்‌ தொடர்ச்சியாக இன்று மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ கோவை மாநகராட்சிக்குட்பட்ட மத்திய மண்டலம்‌ வார்டு எண்‌-45க்குட்பட்ட நியூ முல்லை நகரில்‌ தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில்‌ கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வரும்‌ பணிகளை பார்வையிட்டு, தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில்‌ இருப்பவர்கள்‌ சளி, காய்ச்சல்‌, இருமல்‌ போன்ற அறிகுறிகள்‌ இருப்பவர்கள்‌ கொரோனா பரிசோதனை செய்திட வேண்டும்‌, தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில்‌ உள்ளவர்கள்‌ காலை மாலை வேலைகளில்‌ கிருமிநாசினி கொண்டு வீட்டை சுத்தப்படுத்திட வேண்டும்‌. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில்‌ உள்ளவர்களுக்கு காய்கறி, பால்‌ மற்றும்‌ அத்தியாவசிய பொருட்கள்‌ கிடைத்திட தொடர்புடைய அலுவலா்கள்‌ ஏற்படுத்தித்தர வேண்டும்‌ என தெரிவித்தார்.



இதனை தொடர்ந்து, அதே பகுதியில்‌ சுகாதார பணியாளர்கள்‌ வீடுவீடாக சென்று காய்ச்சல்‌, சளி, இருமல்‌ போன்ற அறிகுறி உள்ள நபர்களை கண்டறிந்து அவர்களை நடமாடும்‌ வாகனங்கள்‌ மூலம்‌ சிகிச்சைக்காக அனுப்பப்பட்டு வரும்‌ பணிகள்‌ நடைபெற்று வருவதை பார்வையிட்ட மாநகராட்சி ஆணையர், அப்பகுதியில்‌ குடிநீர் சீராக கிடைக்கப்பெறுகிறதா என பொதுமக்களிடம்‌ கேட்டறிந்து அனைவரும்‌ முகக்கவசம்‌ கட்டாயம்‌ அணிய வேண்டும்‌, சமூக இடைவெளியை பின்பற்றிட வேண்டும்‌ என தெரிவித்தார்.



மேலும்‌, மத்திய மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்‌.45 நாராயணசாமி லே அவுட்‌ பகுதியில்‌ நுண்ணுயிர்‌ உரம்‌ NCC தயாரிப்பு கட்டிடம்‌ கட்டப்பட்டு வருவதையும்‌, சங்கனூர், கண்ணப்ப நகரில்‌ ரூ.1.5 கோடி மதிப்பீட்டில்‌ கட்டப்பட்டு வரும்‌ எரியூட்டும்‌ மயானக்‌ கட்டிடத்தையும்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது மத்திய மண்டல உதவி ஆணையர்‌ மகேஷ்‌ கனகராஜ்‌, உதவி செயற்பொறியாளா்‌ கருப்புசாமி, மண்டல சுகாதார அலுவலா்‌ ராதாகிருஷ்ணன்‌, சுகாதார ஆய்வாளர்‌ மற்றும்‌ பணி மேற்பார்வையாளர்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...