கோவை: பொதுமக்களுக்கு வழங்கிய புதிய வாக்காளர் அட்டையில், கணவர் மற்றும் தந்தை பெயர் என்று குறிப்பிட்ட இடத்தில், "உறவினர்" என குறிப்பிடப்பட்டுள்ளதால், வாக்களிப்பதில் குழப்பம் ஏற்படுமா? என மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம் சாார்பில் சமீபத்தில் வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டையில், வாக்காளர் பெயருக்கு அடுத்து தந்தை அல்லது கணவர் பெயர் உள்ள இடத்தில், உறவினர் என்று அச்சிடப்பட்டுள்ளது.
இதனால், ஓட்டு போடும் பொழுது உறவினர் என சான்றிதழ் கேட்டால் எப்படி தருவது எனவும், என மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.

இது குறித்து, கோவை பீளமேட்டை சேர்ந்த பண்னீர் செல்வம் என்பவர் கூறும் போது, உறவினர் இன்று குறிப்பிடாமல், தந்தை/கணவர் என்றே அச்சடிதிருந்தால் குழப்பம் ஏற்படாது. தற்போது, தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள வாக்காளர் அட்டையில், உறவினர் என்று குறிப்பிட்டுள்ளது. இது குறித்து, தேர்தல் ஆணையம் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும், இல்லையென்றால் தேர்தல் நேரத்தில் தேவையற்ற குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது, என தெரிவித்தார்.
இது குறித்து தேர்தல் துறை அலுவலர் ஒருவர் தெரிவிக்கும்போது: கணவர் மற்றும் தந்தை பெயர் மாறி விடுவதால், அந்த குழப்பத்தை தவிர்க்கவே உறவினர், என பொதுவாக குறிப்பிடப் பட்டுள்ளதாகவும், இதனால் வாக்களிப்பதில், எந்த பிரச்சனையும் இருக்காது, என கூறினார்.