புதிய வாக்காளர் அட்டையில், கணவர் மற்றும் தந்தை பெயரை உறவினர் என குறிப்பிடப்பட்டுள்ளதால் மக்கள் குழப்பம்

கோவை: பொதுமக்களுக்கு வழங்கிய புதிய வாக்காளர் அட்டையில், கணவர் மற்றும் தந்தை பெயர் என்று குறிப்பிட்ட இடத்தில், "உறவினர்" என குறிப்பிடப்பட்டுள்ளதால், வாக்களிப்பதில் குழப்பம் ஏற்படுமா? என மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

கோவை: பொதுமக்களுக்கு வழங்கிய புதிய வாக்காளர் அட்டையில், கணவர் மற்றும் தந்தை பெயர் என்று குறிப்பிட்ட இடத்தில், "உறவினர்" என குறிப்பிடப்பட்டுள்ளதால், வாக்களிப்பதில் குழப்பம் ஏற்படுமா? என மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.



இந்திய தேர்தல் ஆணையம் சாார்பில் சமீபத்தில் வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டையில், வாக்காளர் பெயருக்கு அடுத்து தந்தை அல்லது கணவர் பெயர் உள்ள இடத்தில், உறவினர் என்று  அச்சிடப்பட்டுள்ளது.

இதனால், ஓட்டு போடும் பொழுது உறவினர் என சான்றிதழ் கேட்டால் எப்படி தருவது எனவும், என மக்கள் குழப்பத்தில் உள்ளனர். 



இது குறித்து, கோவை பீளமேட்டை சேர்ந்த பண்னீர் செல்வம் என்பவர் கூறும் போது, உறவினர் இன்று குறிப்பிடாமல், தந்தை/கணவர் என்றே அச்சடிதிருந்தால் குழப்பம் ஏற்படாது.  தற்போது, தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள வாக்காளர் அட்டையில், உறவினர் என்று குறிப்பிட்டுள்ளது. இது குறித்து, தேர்தல் ஆணையம் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும், இல்லையென்றால் தேர்தல் நேரத்தில் தேவையற்ற குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது, என தெரிவித்தார். 

இது குறித்து தேர்தல் துறை அலுவலர் ஒருவர் தெரிவிக்கும்போது: கணவர் மற்றும் தந்தை பெயர் மாறி விடுவதால், அந்த குழப்பத்தை தவிர்க்கவே உறவினர், என பொதுவாக குறிப்பிடப் பட்டுள்ளதாகவும், இதனால் வாக்களிப்பதில், எந்த பிரச்சனையும் இருக்காது, என கூறினார்.  

Newsletter

கோவையில் பகுதி நேர வேலை தேடி சென்ற கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட வழக்கு; தவெகவினர் 3 பேர் கைது

கோவை பேரூர் அருகே வேலை தேடி உணவகத்திற்குச் சென்ற கல்லூரி மாணவரை, பார்சல் கட்டித் தர மறுத்ததாகக் கூறி தாக்கிய வழக்கில், த...

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...