கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மெய்நிகர் வழியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் முதுகலைப்படிப்பு முதன்மையா் முனைவர். J.S கென்னடி வரவேற்புரை வழங்கினார்.

உக்ரைனிலுள்ள தேசிய உயிர் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைத்தலைவர் பேராசிரியர் B. காசுக் மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதன்மையர் முனைவர். பா.ஸ்ரீதா் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பின்னணியைப் பற்றி எடுத்துரைத்தனர்.
உக்ரைன் பல்கலைக்கழகத்தின் தலைவர் பேராசிரிய நிக்கோலன்கோ மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர். ந.குமார் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வழிநடைபெற உள்ள கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பணிகளைப் பற்றி உரையாற்றினர். தற்போது, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் புதுப்பிக்கவல்ல ஆற்றல் பொறியியல் துறை, உயிர்க் கழிவுகளிலிருந்து ஆற்றல் உற்பத்தி செய்யும் ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருகின்றது.

உக்ரைனிலுள்ள தேசிய உயிர் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் பல்கலைக்கழகம், மின் தொழில்நுட்பங்களின் மூலம் உயிர்க்கழிவுகளை முறைப்படுத்தும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது. இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கல்வி மற்றும் ஆராய்ச்சி தொடர்பான பணிகளை இருநாட்டினரும் பரஸ்பரம் மேற்கொள்ள இயலும். மேலும், இருநாட்டினருக்கும் தேவையான ஆராய்ச்சித் தொடா்பான விவரங்களின் பரிமாற்றத்தால் விவசாயத்துறையில் சீரிய வளர்ச்சியினை ஏற்படுத்த இயலும். நிறைவாக, புதுப்பிக்கவல்ல ஆற்றல் பொறியியல் துறையின் தலைவர் முனைவர். ப.சுப்பிரமணியன் நன்றியுரை கூற விழா இனிதே நிறைவுற்றது.