பொள்ளாச்சி: கோவை ரோடு ஆச்சிபட்டி ஆஞ்சநேயர் கோயில் மற்றும் வால்பாறை ரோடு பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் வாரந்தோறும் சனிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.

ஊரடங்கு காரணமாக, மூடப்பட்டிருந்த இந்த கோயில்கள் கடந்த செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி முதல் கட்டுப்பாடுகளுடன் செயல்பட தொடங்கியது. இந்நிலையில், இன்று புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை என்பதால் பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.
இதற்காக, சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து சமூக இடைவெளியை கடைபிடித்து ஆஞ்சநேயரை வழிபட்டு சென்றனர். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு, உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னரே, கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும், பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராம பகுதிகளில் மழை பெய்வதால் பக்தர்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது.