நீட் தேர்வு தொடர்பான நடிகர் சூர்யா விமர்சனத்திற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிக்கு விரைவு தபால் அனுப்பி வைப்பு!

கோவை: நீட் தேர்வு தொடர்பான நடிகர் சூர்யா விமர்சனத்திற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிக்கு விரைவு தபால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


கோவை: நீட் தேர்வு தொடர்பான நடிகர் சூர்யா விமர்சனத்திற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிக்கு விரைவு தபால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.



நீட் தேர்வு குறித்து நடிகர் சூர்யா சமீபத்தில் நீட் தேர்வு பயத்தில் ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது மனசாட்சியை உலுக்குவதாகவும், தேர்வெழுதப்போகும் மாணவர்களுக்கு வாழ்த்து சொல்வதற்கு பதிலாக ஆறுதல் சொல்வதைப் போல அவலம் வேறு எதுவுமில்லை எனவும் கொரோனா தொற்று போன்ற பேரிடர் காலத்தில் கூட மாணவர்கள் தேர்வெழுதி தங்கள் தகுதியை நிரூபிக்க நிர்ப்பந்திக்கப்படுவது வேதனை அளிக்கின்றது.

அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டிய அரசாங்கம், ஏற்றத்தாழ்வை உருவாக்குகிற கல்வி முறையைச் சட்டமாகக் கொண்டு வருகிறது. ஏழை, எளிய மாணவர்களின் நிதர்சனம் அறியாதவர்கள் கல்விக் கொள்கைகளை வகுக்கிறார்கள். கொரோனா அச்சத்தால் உயிருக்குப் பயந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது என அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில், சூர்யாவின் கருத்து நீதிபதிகள் மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் நேர்மையையும், சிரத்தையையும் அவமதிக்கும் வகையில் உள்ளது. சூர்யாவின் கருத்தானது மாண்பை குறைத்து மதிப்பிடுவது மட்டுமல்லாமல், தவறாக விமர்சிக்கும் வகையிலும் உள்ளது. நீதித்துறை மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது.

எனவே, சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை நீதிபதிக்கு உயர்நீதிமன்ற நீதிபதி சுப்ரமணியம் கோரிக்கை வைத்தார். இதனை விசாரித்த நீதிமன்றம்

நீதிபதிகளையோ, நீதிமன்றத்தையோ அவமானப்படுத்தும் வகையில் நடிகர் சூர்யா பேசக்கூடாது எனவும் குறிப்பாக நீதிமன்றங்கள், நீதிபதிகள் குறித்து விமர்சிக்கும்போது கவனமாக இருக்க வேண்டும் எனவும் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது. அவரின் சமூக சேவைகளை இந்த நீதிமன்றம் பாராட்டுகிறது என்று சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

இந்த நிலையில், நீட் தேர்வு குறித்து நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அவரது விமர்சனம் கண்டனத்திற்கு உரியது என கோவையில் யுவசேனா சிவசேனா கட்சி இளைஞர் அணி சார்பில் போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

போஸ்டரில் நீட் தேர்வு குறித்து சூர்யா மாணவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், பகிரங்க மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் நடிக்கும் படங்கள் வெளிவராது என எச்சரித்து போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, திருப்பூர் மாவட்டம் ராக்கிபாளையம் பகுதியைச் சேர்ந்த அட்சயா திருமுருக தினேஷ் என்பவர் நடிகர் சூர்யா விமர்சனத்திற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிக்கு விரைவு தபால் அனுப்பி வைத்துள்ளார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...