கோவையில் இடபற்றாக்குறை காரணமாக நியாயவிலை கடை முன்பு கொட்டி வைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு தொகுப்பு; பொது மக்கள் அதிர்ச்சி.
கோவை: கோவை கரும்புகடைஉள்ள இலாஹி நகர், வள்ளல் நகர், பகுதிக்கு உள்ளிட்ட நியாய விலை கடையில் விநியோகம் செய்ய கொண்டு வந்த கொரோனா பாதுகாப்பு தொகுப்புகளை,கடையின் முன் ரோட்டோரம்கொட்டி வைக்கப்பட்டுள்ள சம்பவம், அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நியாய விலை கடைகள் மூலம் முகக்கவசம், வைட்டமின் சி-மாத்திரைகள், ஆர்சனிக் அல்பம், கபசுரக்குடிநீர் பொடி, அடங்கிய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தொகுப்புகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

கோவையில், இப்படி விநியோகம் செய்ய வைத்துள்ள நோய் தடுப்பு தொகுப்புகள் கடந்த இரண்டு நாட்களாக, இடப்பற்றாக்குறை காரணமாக, கரும்புக்கடை பகுதியில் உள்ள இலாஹி நகர், வள்ளல் நகர், பகுதிக்கு உட்பட்ட நியாய விலைக்கடையின் முன்பு, உரிய பாதுக்காப்பின்றி சாலை ஓரத்திலேயே, கொட்டி வைக்கப்பட்டுள்ளது, என அப்பகுதி தெரிவிக்கின்றனர்.
கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள வழங்கப்படும், பாதுகாப்புபொருட்கள்வெளியே வைக்கபட்டு உள்ளதால், மழைபெய்தால் அனைத்து தொகுப்புகளும் நனைந்து வீணாக வாய்ப்பு உள்ளது, என அப்பகுதி பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, அப்பகுதி மக்கள் கூறும் போது ரேசன் கடை வெளியே சாலை ஓரத்திலேயே இந்த கிட்டுகளை கொட்டி வைத்துள்ளதால், வாகனங்கள் கடந்து செல்லும் போது மண் தூசிகள் படிந்து, மக்களுக்கு விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்படும், என தெரிவித்தனர்.
இங்கு வைக்க இடமில்லையென்றால், வேறு எதாவது பாதுகாப்பான இடத்தில் வைக்க, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.