நீலகிரி: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளிகளான சயான் மற்றும் வாளையார் மனோஜ் உட்பட 9 பேர் உதகை முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின், காேடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை கொள்ளை வழக்கில் 10 பேர் குற்றம்சாட்டப்பட்டு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இதனிடையே, கொடநாடு கொலை, கொள்ளை வழக்கினை 3 மாதத்திற்குள் முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 10 பேரில் இன்று கோவை மத்திய சிறையிலுள்ள சயான், வாளையார் மனோஜ், இரண்டு பேர் மற்றும் மனோஜ் சாமி, உதயன், பிஜு குட்டி, ஜிதின் ஜாய், சதீசன், சந்தோஷ் சாமி, ஜம்சீர் அலி ஆகிய 9 பேர் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.
தலைமறைவாக உள்ள தீபு என்பவர் மட்டும் ஆஜராகாத நிலையில் இன்று 4 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி வடமலை, குற்றம்சாட்டப்பட்ட 10 பேரும் வரும் 23ம் தேதி ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

இதனை தொடர்ந்து, சந்தோஷ் சாமி, சதிசன், ஜம்சீர் அலி ஆகிய 3 பேரை தவிர, மற்ற 6 பேரையும் கோவை மத்திய சிறைச்சாலைக்கு காவல்துறையினர் அழைத்து சென்றனர்.