திருப்பூரில் மின்சாரம் தாக்கியதில் தனியார் செல்போன் நிறுவன தொழிலாளி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி!

திருப்பூர்: திருப்பூரில் மின்சாரம் தாக்கியதில் தனியார் செல்போன் நிறுவன தொழிலாளி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


திருப்பூர்: திருப்பூரில் மின்சாரம் தாக்கியதில் தனியார் செல்போன் நிறுவன தொழிலாளி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருப்பூர் நாச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்ராஜா (23). இவர் தனியார் செல்போன் நிறுவனமான (ஏர்டெல்) பிராட்பேண்ட் கனெக்சன் சர்வீசில் பணியாற்றி வருகிறார். இவர், கொங்கு மெயின் ரோடு பகுதியை சேர்ந்த பூபதி என்பவர் வீட்டிற்கு, பிராட்பேண்ட் இணைப்பு கொடுத்துவிட்டு சென்ற நிலையில், பிராட்பேண்ட் இணைப்பானது, மின் கம்பத்தில் உள்ள உயர் அழுத்த மின் இணைப்புடன் உரசி வந்ததை தொடர்ந்து, வீட்டின் உரிமையாளர் தனியார் செல்போன் நிறுவனத்திடம் புகார் அளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து, அந்நிறுவனம் சார்பில் கார்த்திக்ராஜா என்ற பணியாளர் சம்பவ இடத்திற்கு வந்து, பிரச்சனையை சரிசெய்து கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக உயர் அழுத்த மின் கம்பியில் கார்த்திக் ராஜாவின் கை பட்டதில், அவரின் உடலில் மின்சாரம் பாய்ந்து தூக்கி எறியப்பட்டார்.

இதில் கார்த்திக் ராஜாவின் உடலில் பலத்த தீ காயம் ஏற்பட, அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும், அதிக மின் அழுத்தம் காரணமாக வீட்டிலிருந்த மின்விசிறி, தொலைக்காட்சி பெட்டி, உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் சேதமடைந்தது. இச்சம்பவம் குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...