பொள்ளாச்சி ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், சமூக இடைவெளியை கடைபிடித்து பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.

பொள்ளாச்சி ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், சமூக இடைவெளியை கடைபிடித்து பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.

பொள்ளாச்சி: நேற்றைய, மஹாளய அமாவாசையை முன்னிட்டு ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், சமூக இடைவெளியை கடைபிடித்து பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணி அம்மன் கோவில் உள்ளது. இங்கு அமாவாசை உள்ளிட்ட முக்கிய தினங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். இந்நிலையில், ஊரடங்கு தளர்வுக்கு பிறகு கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலில், சமூக இடைவெளியை கடைபிடித்து, நோய் கட்டுப்பாட்டு விதிகளுக்கு உட்படுத்தப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், புரட்டாசி மாதம், முதல் நாள் மற்றும் மஹாளய அமாவாசை தினமான நேற்று கோவிலுக்கு மிகுந்த கட்டுப்பாட்டுடன், சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் பரிசோதனைக்கு, பின்னரே வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.



மேலும், கடந்த காலங்களில் அமாவாசை பூஜையில் கலந்து கொள்வதற்காக வரும் வெளியூர் பக்தர்களுக்கு சிறப்பு பேருந்து மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது. இந்த முறை, நோய் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, கோயில் வளாகத்தில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மேலும், தற்போது சிறப்பு பேருந்துகள் இயக்கப்படாததால் வெளியூர் பக்தர்கள் வருகை குறைவாகவே இருந்தது. கொரோனா பரவல் காரணமாக அமாவாசையன்று, இரவு கோயில் நடை மூடப்பட்டது. இதனால், வழக்கம்போல் பகல் நேரங்களில் மட்டும் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து நீண்ட வரிசையில் காத்து நின்று அம்மனை தரிசித்து சென்றனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...