பொள்ளாச்சி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 3 சவரன் நகை பறித்த, கல்லூரி மாணவர் உட்பட இருவர் கைது.
பொள்ளாச்சி அருகேஇருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 3 சவரன் நகை பறித்த 2 பேர் கைது.
பொள்ளாச்சி அருகே உள்ள பட்டணம் பகுதியைச் சேர்ந்தவர் மகாலட்சுமி (35). இவர் பொள்ளாச்சியில் உள்ள நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில், அலுவலக உதவியாளராக உள்ளார். கடந்த 15ம் தேதி மகாலட்சுமி, தனது இரு சக்கர வாகனத்தில், தாமரை குளத்தில் இருந்து பட்டணம் கிராமத்திற்க்கு சென்ற போது, அவர் பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு வாலிபர்கள், மகாலட்சுமி கழுத்தில் இருந்து 3 பவுன் தங்கச் செயினை பறித்துச் சென்றனர்.
இது குறித்து, மகாலட்சுமி கிணத்துக்கடவு போலீசில் புகார் செய்தார். இந்நிலையில், நேற்று போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இரு வாலிபர்கள், முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், மகாலட்சுமியிடம் தங்கச் செயினை பறித்துச் சென்றது தெரியவந்தது. இருவரில் ஒருவர், கோவை சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் (18), இவர் கோவைப்புதூரில் உள்ள கல்லூரியில் 2-ம்ஆண்டு படித்து வருபவர், மற்றொருவர் டிரைவர் நாகார்ஜுனன் (25), என்பது தெரியவந்தது.
இதனையடுத்து, போலீசார் இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 3 பவுன் நகையை மீட்டனர். மேலும், செயின் பறிப்புசம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.