கோவை: ஜி.எஸ்.டி விதிமீறல்கள் தொடர்பாக தடாகம் பகுதியில் இயங்கி வரும் நான்கு செங்கல் சூளைகள் மற்றும் அதன் உரிமையாளர்களின் அலுவலகங்களில், அதிகாரிகள் இன்று திடீர் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் வரி ஏய்ப்பு தொடர்பான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக ஜி.எஸ்.டி மற்றும் மத்திய கலால் துறை இணை ஆணையர் அறிக்கை கொடுத்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உரிய அனுமதியின்றி செயல்பட்டு வரும் செங்கல் சூளைகள் குறித்து கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில், தடாகம் பகுதியில் உள்ள நான்கு செங்கல் சூளைகள் மற்றும் அதன் உரிமையாளர்களின் அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் 60 அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்.
இதில் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு தொடர்பான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. சில கோடி கணக்கில் இவர்கள் வரி ஏய்ப்பு செய்து இருக்கலாம், என தெரியவந்துள்ளது. மேலும் உரிய அனுமதி மற்றும் ஜிஎஸ்டி விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல், இயங்கி வரும் மற்ற செங்கல் சூளைகளிலும் சோதனை நடத்தப்படும், என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.