கோவை பெரியநாயக்கன் பாளையம் வனசரகத்தில் அவுட்டுக்காய்கள் தயாரித்து விற்பனை செய்தவர் கைது

கோவை பெரியநாயக்கன் பாளையம் வனசரகத்தில் அவுட்டுக்காய்கள் தயாரித்து விற்பனை செய்தவர் கைது.


கோவை பெரியநாயக்கன் பாளையம் வனசரகத்தில் அவுட்டுக்காய்கள் தயாரித்து விற்பனை செய்தவர் கைது.

அவுட்டுக்காயால் பல வன உயிர்கள் உயிரிழந்து வரும் நிலையில், அதை வியாபாரம் செய்து வந்தவரை அதிரடியாக வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோவை வனக்கோட்டத்தில் மதுக்கரை, கோவை, பெரிய நாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம், சிறுமுகை, போளுவாம்பட்டி, காரமடை என ஏழு வனச்சரகங்கள் உள்ளன. இந்த, வனசரகங்களை ஒட்டியுள்ள கிராம பகுதிகள் மற்றும் பட்டா நிலங்களில் யானைகள் வருவதால் அவுட்டுக்காயை வைத்தும், கன்னி வெடி வைத்து வருகிறார்கள்.

அதை தடுக்கும் பொருட்டு இரு வாரங்களுக்கு முன்பு உதவி பாதுகாவலர்கள், தினேஷ் தலைமையில் ஒரு தனிப்படையும், பெரியநாயக்கன்பாளையம் சரக எல்லையில், செந்தில்குமார் தலைமையில் மற்றொரு படையும், போளுவாம்பட்டி மற்றும் மதுக்கரை சரக எல்லையில் ஒரு படையும் அமைத்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.



அதில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், காரமடை அடுத்த சீலியூரில் மூர்த்தி என்பவர் அவுட்டுக்காயை தயாரித்து விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் நரசிம்ம நாயக்கன்பாளையம், வனவர் ராமகிருஷ்ணன், வனக்காப்பாளர் கல்யாணசுந்தரம் ஆகியோர் மாறுவேடத்தில் சென்று குற்றவாளியை சீலியூர் பேருந்து நிறுத்தத்தில் வைத்து விசாரணை செய்து, கைதும் செய்துள்ளனர்.

மேலும், அவரது வீட்டிற்கு சென்ற ஆய்வாளர்கள், வேட்டையாடுவதற்கு பயன்படுத்தப்படும் ஏர்கன், நாட்டு வெடிகுண்டு செய்வதற்கான பொருட்கள், கத்தி, சுருக்கு கயிறு போன்றவற்றை கையகப்படுத்தி, முதல் கட்ட அறிக்கை தாக்கல் செய்து காரமடை காவல்துறையிடம், அவற்றை ஒப்படைத்தனர்.

மேலும், இது குறித்த விசாரணை தீவிரம் அடைந்துள்ள நிலையில், வனங்களை ஒட்டியுள்ள இடங்களில் சோதனை நடத்த வேண்டும், என்று வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...