பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட யூனிவர்சல் டிரேடிங் சொல்யூசன் நிறுவனர் கைது: கோப்புகளை கைப்பற்றி, கேரளா போலீஸார் அழைத்து சென்றனர்

பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட யூனிவர்சல் டிரேடிங் சொல்யூசன் நிறுவனர் கைது: கோப்புகளை கைப்பற்றி, கேரளா போலீஸார் அழைத்து சென்றனர்

கோவை பாப்பநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்த கெளதம் என்பவர் பீளமேடு பகுதியில் யூனிவர்சல் டிரேடிங் சொல்யூசன் என்ற நிதி நிறுவனத்தை நடத்தி வந்தார். இதன் கிளை நிறுவனங்களை தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும், கேரளா, கர்நாடக ஆகிய மாநிலங்களிலும் நடத்தி வந்தார்.

இவர் நிறுவனத்தில், ஒரு லட்சம் முதலீடு செய்தால், ஒரே ஆண்டில் நான்கு லட்சம் கிடைக்கும், என்று விளம்பரம் செய்திருந்தார். அதை நம்பி, இவர் நிறுவனத்தில் பலரும் முதலீடு செய்தனர்.

கடந்த ஆண்டு, இவர் தலைமறைவான நிலையில், கோவை பீளமேடு பகுதியில் உள்ள இவரின் நிறுவனத்தை முதலீடு செய்த மக்கள் முற்றுகையிட்டனர். இதனை, தொடர்ந்து பீளமேடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தலைமறைவாகிய கெளதமை தனிப்படை அமைத்து தேடிவந்தனர். கேரளாவிலும் இவர் மீது வழக்கு பதிவு செய்து கேரள காவல்துறையினர் இவரை தேடி வந்தனர்.

இந்நிலையில், தலைமறைவாக இருந்த கெளதமை கடந்த 12ம் தேதி தனிப்படை போலீஸார் சேலத்தில் கைது செய்தனர்.



இது குறித்து, தகவலறிந்த கேரள போலீஸார், டி.எஸ்.பி சியாம்ஸ் தலைமையில் சேலத்தில் கைதான கெளதமை கோவைக்கு அழைத்து வந்து பீளமேட்டில் உள்ள அவரது நிறுவனத்தில் இருந்து கணினி ஆவணங்கள் கோப்புகள் போன்றவற்றை கைபற்றி கெளதமை, கேரளாவிற்கு அழைத்து சென்றனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...