கோவை: கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்த சிவராஜ் கார்டன் பகுதியில் வசித்து வரும் அசாம் மாநிலத்தை சேர்ந்த தம்பதி, அபுல் உசேன் மற்றும் தர்ஷினிக்கு, மூன்று வயதில் ஒரு பெண் குழந்தையும், ஒன்பது மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.

நேற்று முன் தினம், காலையில் எழுந்து பார்த்த பொழுது அவர்களது 9 மாத ஆண் குழந்தை காணாததை தொடர்ந்து கணவன் மனைவி இருவரும் குழந்தையை பல இடங்களில் தேடி உள்ளனர்.
அப்போது, பாத்திரம் கழுவ வைத்திருந்த பக்கெட்டில் இருந்த தண்ணீரில் மூழ்கி குழந்தை இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின், தம்பதியினர் குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை, ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இது குறித்து, தொண்டாமுத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.