கோவையில் 13 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்ற நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

கோவையில் 13 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்ற நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது


கோவை: கோவையில் 13 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்ற நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த 9 ம் வகுப்பு படிக்கும், மாணவி காணாமல் போனதை தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த ராமநாதபுரம் போலீசார் மாணவியை தேடி வந்தனர்.

இந்தநிலையில், மாணவியின் அலைபேசி சிக்னலை கொண்டு, அவர் திருப்பூர் பகுதியில் இருப்பது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து, அங்கு சென்ற போலீசார் மாணவியை மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

அப்போது, அவருடன் இருந்த நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியை சேர்ந்த பிரசாந்த் (20) என்பவர் மாணவியை திருமண ஆசை வார்த்தைகள் கூறி அழைத்து வந்தது விசாரனையில் தெரியவந்தது.

இதனையடுத்து, நடத்தப்பட்ட விசாரணையில், பிரசாந்த் திருப்பூரில் ஒரு பனியன் கம்பெனியில் பணியாற்றி வந்ததும், ஒரு திருமண நிகழ்வின் போது, அவருக்கும், மாணவிக்கும்

பழக்கம் ஏற்பட்டுள்ளது, என தெரிவித்தார். அந்த மாணவியிடம், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, சிறுமியை திருப்பூருக்கு அழைத்து சென்றதும், விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, பிரசாந்த் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...