பெரியாரின் 142 வது பிறந்த நாள்: கோவையில் திராவிட இயக்கத்தினர் மலர் தூவி மரியாதை
பெரியாரின் 142 வது பிறந்த நாள் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம், திமுக தலைவர், ஸ்டாலின், அமைச்சர்கள், மூத்த அரசியல் தலைவர்கள் மற்றும் திராவிட கட்சிகளின் தொண்டர்கள் என ஏராளமானோர், பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதன் தொடர்ச்சியாக, கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு திமுக முன்னாள் எம்எல்ஏ பொங்கலூர் பழனிச்சாமி தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனை தொடர்ந்து, சமூக நீதி கட்சி மற்றும் பெரியாரிய உணர்வாளர்கள், பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதனை தொடர்ந்து, பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பினர் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி உறுதிமொழி மேற்கொண்டனர்.