கோவையில் நபரை கத்தியால் தாக்கி, இரண்டு லட்சம் ரூபாய் பறிப்பு: திடிக்கிடும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு

கோவை: கோவையில் காரில் அமர்ந்திருந்த நபரை மர்ம நபர் ஒருவர் கத்தியால் தாக்கிவிட்டு, அவரிடம் இருந்த இரண்டு லட்ச ரூபாயை பிடுங்கி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவையில் காரில் அமர்ந்திருந்த நபரை மர்ம நபர் ஒருவர் கத்தியால் தாக்கிவிட்டு, அவரிடம் இருந்த இரண்டு லட்ச ரூபாயை பிடுங்கி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை டாடாபாத் 9 வது வீதியை சேர்ந்தவர் ஜோய், இவர் இன்டீரியர் டெக்கரேசன் தொழில் செய்து வருபவர். கடந்த 14 ம் தேதி இரவு ஆர்.எஸ்.புரம் பகுதியில் தனது நண்பரிடம் 2 லட்ச ரூபாய் பணம் வாங்குவதற்காக வந்துள்ளார்.

பணத்தை வாங்கி விட்டு காரில் அமர்ந்த படி நண்பரிடமும் அவரது மனைவியிடமும் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது, கையில் கத்தியுடன் வந்த இளைஞர் ஒருவர், ஜோயை கடுமையாக தாக்கினார். இதில் நிலை குலைந்த ஜோய் , காரின் மற்றொரு பகுதியில் உள்ள கதவை திறந்து கீழே விழுந்தார்.

அப்போதும், விடாமல் வந்த அந்த நபர் ஜோயை கத்தியால் உடலின் பல பகுதிகளில் குத்தினார். இதில், பலத்த காயம் அடைந்த ஜோய் அலறியதை கேட்டு பொதுமக்கள் ஒன்று கூடினர்.

இதனையடுத்து, இரு சக்கர வாகனத்தில் தயாராக இருந்த நபரை நோக்கி அந்த கொலையாளி ஒடினார். இந்த காட்சிகள் அனைத்தும், அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், ஜோய் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது, தொடர்பாக வழக்கு பதிவு செய்த ஆர்.எஸ்.புரம் காவல் துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...