திருமூர்த்தி அணையிலிருந்து, வெள்ளகோவில் பகுதிக்கு கூடுதல் நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட பொள்ளாச்சியில் விவசாயிகள் முற்றுகை போராட்டம்

திருமூர்த்தி அணையிலிருந்து, வெள்ளகோவில் பகுதிக்கு கூடுதல் நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட பொள்ளாச்சியில் விவசாயிகள் முற்றுகை போராட்டம்

பொள்ளாச்சி: திருமூர்த்தி அணையிலிருந்து, வெள்ளகோவில் பகுதி விவசாயிகளுக்கு, கூடுதல் நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி, பொள்ளாச்சியில் உள்ள கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை.

பொள்ளாச்சி அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள தொகுப்பு அணைகள் இருந்து வரும் தண்ணீர் மூலம் கோவை, திருப்பூர் மாவட்டத்திலுள்ள 4 லட்சம் ஏக்கர் பாசன விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனர்,

இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழையைப் பொறுத்து, திருமூர்த்தி அணையிலிருந்து ஆண்டுக்கு நான்கு மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பொள்ளாச்சி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த மழை காரணமாக, பிஏபி தொகுப்பு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, திருமூர்த்தி அணைக்கு காண்டூர் கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது.



இதனைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் மாதம் நான்காம் மண்டல பாசனத்திற்கு, திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது, ஆனால் திருமூர்த்தி அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர், கடைமடையில் உள்ள வெள்ளக்கோயில் மற்றும் காங்கேயம் பகுதி விவசாயிகளுக்கு முறையாக வரவில்லை, என அப்பகுதி விவசாயிகள் புகார் தெரிவித்து,

நேற்று மாலை பொள்ளாச்சி - உடுமலை ரோட்டில் உள்ள பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்ட கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

"ஆண்டுதோறும் திருமூர்த்தி அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடும் போது வெள்ளகோவில் மற்றும் காங்கேயம் பகுதியில் உள்ள 48 ஆயிரம் ஏக்கர் பாசனத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. குடிநீருக்கும், கால்நடைகளுக்கு மட்டுமே அந்தத் தண்ணீர் பயன்படுகிறது. மேலும், பாசனத்துக்கு 1,150 மில்லியன் கனஅடி வரவேண்டிய நிலையில், தற்போது 600 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டுமே வருவதால் முறையான பாசனம் செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்",என விவசாயிகள் தெரிவித்தனர்.



எனவே, ஒப்பந்தப்படி முறையான தண்ணீர் திறந்து விட வேண்டும் என்றும் வெள்ளகோவில் மற்றும் காங்கேயம் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...