பொள்ளாச்சியில் நேற்று 11 பேருக்கு கொரோனா தொற்று; இருவர் பலி.
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் நேற்று 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது எனவும் இதில் மூதாட்டி உள்ளிட்ட 2 பேர் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
பொள்ளாச்சி சரோஜினி வீதியை சேர்ந்த 85 வயது முதியவர், கிருஷ்ணசாமி வீதியை சேர்ந்த 70 வயது முதியவர், ரங்கசமுத்திரம் 71 வயது முதியவர், குஞ்சிபாளையம் - சக்தி கார்டன் 64 வயது முதியவர், ஜமீன் ஊத்துக்குளி 19 வயது ஆண். கரப்பாடி 75 வயது ஆண், ஆனைமலை அப்துல் நகர் 48 வயது பெண், ஆனைமலை அண்ணாநகர் 21வயது ஆண், அங்கலக்குறிச்சி 35 வயது ஆண், ஆகியோருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
மேலும், ஆனைமலை ராமலிங்கம் வீதியை சேர்ந்த 55 வயது ஆண், சுய நினைவு இல்லாததால் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் .பின், கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். அங்கு பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா உறுதியாகிய நிலையில், அவர் இறந்தார்.
தொடர்ந்து, ஜமீன் முத்தூர் பகுதியை சேர்ந்த 75 வயது மூதாட்டி உடல்நிலை குறைவால் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனை செய்ததில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவரும் சிகிச்சைபலனின்றி இறந்தார்.
தொற்று பாதிக்கப்பட்ட மற்றும் இறந்தவர்களின் வீடுகளில் மற்றும் சுற்றியுள்ள இடங்களில், சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.